குழந்தைகளின் எதிர்காலத்துக்காக கிட்டினியை விற்ற தந்தைக்கு நேர்ந்த கொடுமை

By Arun · 14/7/2024

குடும்ப சூழலுக்காக சிறுநீரகம் விற்ற தந்தை ஒருவர் ஏமாந்து இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மதுபாபு கர்லபதி. இவர் ஆட்டோ டிரைவர். பொருளாதார ரீதியாக இவர் ரொம்பவே கஷ்டப்பட்டு வருகிறார். வீட்டு செலவிற்கும், குழந்தைகளின் படிப்புக்காக இவர் நிறைய லோன் மூலம் கடன் வாங்கி இருந்தார்.

இதனால் இவர் நிறைய கடன் பிரச்சனையில் சிக்கி இருந்தார். இதிலிருந்து எப்படியாவது வெளிவர வேண்டும் என்று போராடி இருந்தார். இருந்தும் வழி கிடைக்கவில்லை. அப்போது தான் சோசியல் மீடியாவில் சிறுநீரக தானம் தந்தால் 30 லட்சம் பணம் தருவதாக விளம்பரம் பார்த்திருக்கிறார். பின் மது பாபு கிட்னி கொடுத்தும் அவருக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக பேட்டியில் மதுபாபு, நான் ரொம்ப கடன் தொல்லையில் இருக்கிறேன்.

கிட்னி தியானம் விளம்பரம்:

என் குழந்தைகளோட எதிர்காலத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் விளம்பரத்தில் சிறுநீரகம் தானம் செய்யும் விளம்பரத்தை பார்த்தேன். சிறுநீரக தானம் செய்தால் 30 லட்சம் பணம் தருவதாக விளம்பரம் செய்தார்கள். இது தொடர்பாக அந்த விளம்பரத்தில் இருந்த நம்பரை தொடர்பு கொண்டேன். அப்போது விஜயவாடாவில் இருந்து பாஷா என்பவர் பேசினார். அவர், தேவைப்படுபவர்களுக்கு நாம் செய்யும் இந்த உதவி மிகப் பெரியது. உங்களுக்கான பணம் கண்டிப்பாக கிடைக்கும் என்று எனக்கு வாக்களித்திருந்தார்.

ஏமாந்த தந்தை:

அதுமட்டுமில்லாமல் இதேபோல் அறுவை சிகிச்சை செய்த ஒரு பெண்ணையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். அந்தப் பெண்ணும் சிகிச்சை முடித்த உடனே எனக்கு பணம் கொடுத்து விட்டார்கள் என்று நம்பிக்கையாக பேசியிருந்தார். இது எல்லாம் பார்த்துதான் நான் சிகிச்சை செய்து கொள்ள சம்மதித்தேன். முதற்கட்டமாக எனக்கு 50,000 கொடுத்து இருந்தார்கள். அதற்கு பிறகு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடந்தது.

போலீசில் அளித்த புகார்:

மருத்துவமனையில் சிறுநீரகத்தை வாங்கப் போகும் ஒரு குடும்பத்தை அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள், சிகிச்சைக்குப் பிறகு மொத்த பணத்தையும் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து விடுகிறேன் என்று உறுதி அளித்திருந்தார்கள். எனக்கு டாக்டர் சரத் பாபு என்பவர்தான் அறுவை சிகிச்சை செய்திருந்தார். சிகிச்சைக்குப் பிறகு என்னுடைய குடும்பத்திடம் யாரும் பணமே கொடுக்கவில்லை. அந்த கும்பலையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்குப் பிறகுதான் நான் ஏமாந்து விட்டேன் என்று தெரிந்தது. பின் இது தொடர்பாக நான் போலீசிலும் புகார் அளித்திருந்தேன்.

போலீஸ் விசாரணை:

போலீஸ் விசாரித்ததில் பாதிக்கப்பட்டவரும், சிறுநீரகம் பெற்றதாக கூறப்படும் குடும்பத்துக்கும் இடையே சொல்லப்பட்ட உறவுகள் அனைத்துமே போலி என்று ஆவணங்களை காண்பித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் எனக்கு வலது சிறுநீரகம் எடுப்பதாக சொல்லி இடது சிறுநீரகத்தை எடுத்து இருக்கிறார்கள். இதை அடுத்து மருத்துவமனையிலும் இது தொடர்பாக விசாரித்திருக்கிறார்கள். அங்கும் சட்ட ஆவணங்கள் படி அறுவை சிகிச்சை சரியாகத்தான் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் இந்த மோசடியில் இருப்பவர்களை கண்டிப்பாக கண்டுபிடித்து சட்டம் உரிய தண்டனை வழங்க வேண்டும். போலீசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full