அமைச்சரின் வழக்கில் 3 மாதம் அவகாசம் கேட்ட அமலாக்க துறை - மறுத்து நீதிமன்றம் போட்ட உத்தரவு.

By S.Dhilip Kumar · 8/8/2023

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க 3 மாசம் அவகாசம் கேட்ட அமலாக்க துறை தற்கு செப்டம்பர் 30 க்குள் விசாரணையை முடித்து விட்டு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று இரவு சென்னை முதன்மை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பலத்த பாதுகாப்புடன் மூன்று கார்களில் அவரை ஏற்றி சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்க துறை அலுவகத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் 5 நாட்கள் விசாரணை நடைபெற்ற உள்ளது.

அமைச்சரின் வழக்கு

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார் என சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வெவ்வேறு தீர்ப்பினை வழங்க வழக்கு மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது. மூன்றாவது அமர்வு அவர் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு தான் என்றும் அவர் குணமடைந்த பிறகே அவரை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கின.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நேற்று இரவு 8 மணியளவில் புழல் சிறையில் இருந்து அமலாக்க துறையினரால் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனிற்கு அவரை விசாரனைக்காக அவரை அழைத்து சென்றது. அவரிடம் நேற்று இரவு முதல் விசாரணை தொடங்கப்பட வில்லை என்றும் காலை முதல் தான் விசாரணை ஆரம்பித்தது தகவல்கள் தெறிவிக்கின்றன. மேலும் அவருக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலையே மருத்துவ குழு வந்து அவரை பரிசோதித்து விட்டு சென்ற நிலையில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றன.

இன்று முதல் கட்டமாக 150 கேள்விகள் வரை கேட்க படும் என்றும் அமலாக்க துறையின் மூலம் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இது குறித்து 3 மாசம் அவகாசம் வேண்டும் என்று அமலாக்க துறை நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் விசாரனையை செப்டம்பர் 30 க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப் புலனாய்வுக்கு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த காலதிற்குள் முடிக்க வில்லை என்றால் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.  

Tamil Behind Talkies AMP · Quick view
View full