“கண்களை கட்டி இருக்கும் நீதி தேவதையை போலவே சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு இருகிறது” அமைச்சர்களின் வழக்கை பற்றி அதிருப்தி தெரிவித்த நீதிபதி.

By Dhilip Kumar · 24/8/2023

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த தங்கம் தன்னரசு மற்றும் கே கே எஸ்எஸ் ஆர். ராமச்சந்திரன் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது அப்போது. தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினரம் 76.40 லட்சம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், KKSSR ராமசந்திரன் மற்றும் அவர் குடுமபத்தினர் மீதும் 44.56 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் இது தொடர்பான வழக்குகள் 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் தங்களை விடுவிக்க கோரி அவர்கள் சார்பிலும் அவரது குடும்பத்தினர்கள் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. அந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டு கீழமை நீதிமன்றம் இந்த வழக்குகளில் இருந்து இவர்கள் இருவரையும் விடுவித்தது. இந்த உத்தரவு எதிர்த்து லட்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு செய்யாத நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு நேற்று (புதன் கிழமை) விசாரணைக்கு வந்தது.

இந்த தீர்ப்பை யாரும் இதுவரை மேல் முறையீடு செய்யாத வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து அந்த வாழ்க்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். அமைச்சர் பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து சாரணைக்கு எடுத்த நிலையில் தற்போது மேலும் இரண்டு அமைச்சர்கள் மீதான வழக்குகளையும் ஆனந்த வெங்கடேசன் விசாரணைக்கு எடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அன்பு அமைச்சர்கள் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

நீதிபதி கருத்து:

நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன் வந்து விசாரணை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 2021 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தங்களது நிலைபாட்டை மாற்றிகொள்வது காண முடிகிறது. அதிகாரத்துக்கு யார் வந்தாலும் அந்த அதிகாரத்தை நீர்த்துப்போகவேச் செய்கிறார்கள். சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் உண்மையாகவே அதிர்ச்சியளிக்கிறது என்றும் இந்த வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ.எஸ்.ஆர். ராமசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராமச்சந்திரனை விடுவித்ததன் மூலம் கண்களை கட்டி இருக்கும் நீதி தேவதையை போலவே சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீதிபதி ஆனந்த வெங்கடேசன் 2021 ஆம் ஆண்டுக்கு முன் வழக்குகளில் இருந்து விடுவிக்க கூடிய மனுக்களுக்கு பதிலளித்த புலன் விசாரணை அதிகாரிகள் வழக்கில் முகாந்திரம் உள்ளதாக கூறியிருந்தனர் என்றும், ஆட்சி மாற்றத்திற்கு பின் வழக்குகளில் உண்மையை கண்டறிய மேல்விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற புலன் விசாரணை அதிகாரிகள் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரங்கள் இல்லை என வழக்குகளை முடித்து வைப்பது வினோதமாக உள்ளது என தெரிவித்துள்ள நீதிபதி இரு வழக்குகளையும் 2012 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளையும் புறந்தள்ளியுள்ளது சட்டவிரோதமானது என்றும் கூறி இருந்தார். தான் முன் அவிழ்க்கப்பட்ட வஞ்சக சதி கண்டுகொள்ளாமல் கண்களை கட்டியிருக்கும் நீதி தேவதையை போலவே சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு இருக்கிறது என விமர்சித்துள்ள நீதிபதி.

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தின் அணுகுமுறையை சிறப்பு நீதிமன்றகளும் செயல் படுத்துமே ஆனால் எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் சேர்ந்து ஊழல் வழக்குகளுக்கு இரங்கல் செய்தியை எழுதிவிடும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full