'சூர்யா 44' படத்திற்கு வந்த சிக்கல் - பாவம் இந்த மனுசனுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது

By subhashini · 29/11/2024

நடிகர் சூர்யாவின் படத்திற்கு வந்திருக்கும் புதிய சிக்கல் குறித்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு இந்த படம் குறித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி வருகிறார்கள். குறிப்பாக, இந்த படத்தில் நிறைய சத்தம் தான் கேட்கிறது என்று எல்லாம் ட்ரோல் செய்து இருந்தார்கள்.

கங்குவா படம்:

இருந்தாலும், இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 58.62 கோடி வசூல் செய்து இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் கங்குவா படத்தை விமர்சிப்பதை விட சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது தான் அதிகமாக இருக்கிறது. இதற்கு பிரபலங்கள் பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக பதிவு போட்டு இருந்தார்கள். இதை அடுத்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய 44வது படத்தில் நடிக்கிறார்.

சூர்யா 44 படம்:

இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தான் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு எல்லாம் முடிந்து விட்டது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. கூடிய விரைவில் இந்த படத்தினுடைய டைட்டில், டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

படத்திற்கு வந்த சிக்கல்:

இப்படி இருக்கும் படவே நிலையில் சூர்யா படத்திற்கு வந்த புது சிக்கல் குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, சூர்யாவின் 44வது படத்திற்கு கல்ட் என்று பெயர் வைக்க கார்த்திக் சுப்புராஜ் யோசித்து வைத்திருந்தார். ஆனால், நடிகர் அதர்வா தான் இயக்கம் இருக்கும் புதிய படத்திற்கு இந்த பெயரை வைக்க பதிவு செய்து வைத்திருக்கிறார். இதை அறிந்த சூர்யா 44 படத்தினுடைய படக்குழு அதர்வாவை தொடர்பு கொண்டு பேசி இருந்தார்கள். ஆனால், அதர்வா டைட்டிலை தர மறுத்து இருக்கிறார். இதனால் கார்த்திக் சுப்புராஜ், 'சூர்யா 44' படத்திற்கு வேறு ஒரு டைட்டிலை வைக்க வைப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full