இந்தியாவின் பணக்கார நடிகைகள் குறித்த பட்டியல்- நம்பர் 1 இடத்தில் எந்த நடிகை தெரியுமா?
இந்தியாவின் நம்பர் 1 பணக்கார நடிகை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அளவில் பல பிரபலமான நடிகைகள் இருக்கிறார்கள். இவர்கள் நடிப்பில் மட்டுமில்லாமல் விளம்பரப்படங்கள், கலை நிகழ்ச்சிகளில் என பங்கேற்று கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். அதோடு பல ஆண்டு காலமாக நடித்து வரும் நடிகைகள் தான் அதிகமாக சொத்து வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் அதிக அளவு சொத்து மதிப்பு வைத்திருக்கும் நடிகைகளின் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஐஸ்வர்யா ராய்:
எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் இன்றும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். மேலும், இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக பணியாற்றி வருகிறார். இவர் 862 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மற்ற முன்னணி நடிகர்களை விட இவருடைய சொத்து மதிப்பு அதிகம் எனலாம்.
பிரியங்கா சோப்ரா:
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டும் இல்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கி பல விளம்பரங்களில் நடித்தார். அதற்கு பின் இவர் முதன் முதலாக தமிழ் மொழி மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பின் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் 650 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
ஆலியா பட்:
இவர் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவரது கணவர் தான் ரன்பீர் கபூர். அவரும் பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலனான நடிகர். சமீபத்தில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. பின்னர் சில காலம் ஓய்வெடுத்த அலியா பட் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.
நடிகை நயன்தாரா:
இவர் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகை ஆகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக வாங்கும் சூப்பர் ஸ்டார் ஆக நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.