சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட பெரிய அளவில் விரைவில் கட்டிமுடிக்கப்பட உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சிலை.

By Dhilip Kumar · 8/8/2023

குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதைவிட பிரமாண்ட அளவில் சிலை நிறுவப்பட உள்ளது. இச்சிலையானது புனே நகரில் 200மீட்டர் உயர்வில் அமையுள்ளது. இது உலகில் உள்ள மிக பெரிய உருவ சிலையாக இருக்கும். மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் அமையுள்ளது. இதற்க்கான காரணம் என்னவென்றால் இங்கு சுற்றுல்லா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தான்.

இந்த நகரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் பெற்றுள்ள டார்வின் பிளாட்பார்ம் இன்பிராஸ்டிரக்சர் (டிபிஐஎல்) நிறுவனம் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பிரதமர் மோடிக்கு உலகிலேயே மிகப் பெரிய சிலையாக 200 மீட்டர் உயரத்தில் அமையப் படும் என்றும் அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சிலையானது இந்த வருடம் 2023 டிசம்பர் மாதம் இறுதிக்குள் இச்சிலையானது நிறுவப்படும் எனவும் அந்நிறுவனம் தகவல்களை தெரிவித்துள்ளது.

இச்சிலையின் திறப்பு விழாவிற்கு இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்க நாட்டுத் தூதர்களை அழைக்கவும் அந்த தனியார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. குஜராத்தில் அமைந்துள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மிகப்பெரிய சிலை அமைந்துள்ளது. இதனுடைய உயரம் 182மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தற்போது பிரதமர் மோடிக்கு அமையுள்ள சிலையானது 190 மீட்டர்முதல் 200 மீட்டர் வரை அமைய திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூறிய டி.பி.ஐ.எல் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அஜய் ஹரிநாத் கூறுகையில் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு காக்க பிரதமர் மோடி போராடி வருகிறார் மேலும் தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து நாடு தொலைநோக்கு பார்வையை அடைந்துள்ளது. இந்த நட்டிற்கு அவர் செய்த தொண்டுகளை பாராட்டும் வகையில் சிலை அமையும் என்று கூறினார்.

டிசம்பர் மாதம் இச்சிலை திறக்கபட்டால் உலகின் மிகப்பெரிய சிலையாக இது அமையும் என்றும் கூறினார். சிலை அமைக்கப்படும் வளாகத்தில் நாட்டின் பாரம்பரியத்தை சித்தரிக்கும் அருங்காட்சியகம், ‘புதிய இந்தியா’வின் திட்டங்கள், கண்காட்சி கூடம் ஆகியவையும் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்றும் கண்காட்சி அரங்கில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது..                

Tamil Behind Talkies AMP · Quick view
View full