சூர்யா, ஜோதிகா படங்களை இனி திரையிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு. காரணம் இது தானாம்.

By Rajkumar · 25/4/2020

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. திருமணத்துக்கு பிறகும் '36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி' ஆகிய படங்களில் நடித்தார் ஜோதிகா.

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஜோதிகா நடித்திருக்கும் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’-யிற்கு ரூ.9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

https://twitter.com/silverscreenin/status/1253781767086997504

நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் இந்த படத்தினை ஜே.ஜே.ப்ரட்ரிக் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.4 1/2 கோடியாம். ஆனால், தயாரிப்பு நிறுவனத்திற்கு டிஜிட்டல் பிளாட்ஃபார்மிற்கு விற்றதால் அதிக லாபம் கிடைத்து விட்டதாம்.

தற்போது, இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் பேசுகையில் "நடிகர் சூர்யா எடுத்திருக்கும் இம்முடிவு எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது. 'கொரோனா' லாக் டவுன் மற்றும் இச்சம்பவத்தினால் ஆயிரக் கணக்கான திரையரங்குகளை சார்ந்த அவர்களது குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கின்றது.

https://twitter.com/Chrissuccess/status/1253726312042237953

அதை கருத்தில் கொண்டு சூர்யா முடிவெடுக்க வேண்டும். ஒரு வேளை சூர்யா எங்களது கோரிக்கையை ஏற்காமல் 'பொன்மகள் வந்தாள்' படத்தை நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ரிலீஸ் செய்யும் பட்சத்தில், அதன் பிறகு சூர்யா தயாரிப்பில் உருவாகும் படங்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் தயாரிப்பில் உருவாகும் படங்களை நாங்கள் திரையரங்குகளில் திரையிட மாட்டோம்" என்று பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full