என்னது தென்றல் 2.0 வா - தீபக் பதிவிட்ட புகைப்படம். ஸ்ருதி போட்ட கமன்ட்.

By Rajkumar · 16/6/2020

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மிகப் பிரபலமான நடிகை என்று சொன்னால் நடிகை ஸ்ருதி ராஜை சொல்லலாம். ஏன் என்றால் அந்த அளவிற்கு பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். சின்னத்திரையில் நடிகைகளில் மிகவும் அழகான மற்றும் அமைதியான முகம் உடையவர் நடிகை ஸ்ருதி ராஜ். தன்னுடைய சீரியல் நடிப்பின் மூலம் பல குடும்பப் பெண்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ். ஸ்ருதி ராஜ் அவர்கள் முதன் முறையாக சினிமா உலகிற்கு மலையாள படத்தின் மூலம் தான் அறிமுகமானர்.

https://www.instagram.com/p/CBcO7M4hRjj/

பின்னர் 1996-ஆம் ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளியான 'மாண்புமிகு மாணவன்' திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு நடிகை ஸ்ருதி ராஜ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.ஆனால், இவர் சினிமா துறையில் பல மொழி படங்களில் நடித்தும் பெரிய அளவு சினிமா உலகில் வெற்றி பெறவில்லை. மேலும்,மக்களிடையேயும் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. இதனால், இவர் சின்னத்திரை நோக்கிய பயணம் செய்தார்.

மேலும், அந்த துளசி கதாபாத்திரத்தை தற்போது வரை யாராலும் மறக்க முடியாது. அதனால்,தென்றல் சீரியலை மீண்டும் யூடுப் சேனலில் ஒளிபரப்பு செய்தார்கள். அந்த அளவிற்கு தென்றல் சீரியல் மக்களிடையே அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. 9இந்த நிலையில் ஸ்ருதியுடன் தென்றல் தொடரில் நடித்த தீபக், சுருதியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதி தென்றல் தொடருக்கு பின்னர் அபூர்வராகங்கள், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ஆபீஸ் போன்று பல சீரியல்களில் நடித்து வந்தார்.மேலும், அழகு சீரியல் மூலம் மீண்டும் தனக்கென ஒரு ரசிகர் படையை சேர்த்து உள்ளார் என்று கூட சொல்லலாம்.சீரியல்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஸ்ருதியின் இந்த அல்ட்ரா மாடர்ன் புகைப்படத்தை கண்டு பலரும் வியந்துள்ளனர்.

மேலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் மற்றும் தென்றலை ஒன்றாக இருப்பதை கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த தீபக், ''இந்த போட்டோவை நிஜம் என நினைத்து, இது எந்த சீன் என யோசித்து கொண்டிருந்தேன்'' என பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகை ஷ்ருதிராஜ், ''இது தென்றல் 2.0. இதில் நாங்கள் இருவரும் டான்'' என கமன்ட்செய்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full