அது பச்ச பச்சையா பேசுது - வனிதா பற்றி பேசிய தியாகராஜன், தடுத்த பிரசாந்த்

By subhashini · 6/8/2024

வனிதா கெட்ட வார்த்தையில் பேசியதற்கு இது தான் காரணம் என்று 'அந்தகன்' பட விழாவில் தியாகராஜன் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். கடந்த சில வாரங்களாகவே அந்தகன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது பிரசாந்த் அவர்கள் அந்தகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹிந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்.

அந்தகன் படம்:

மேலும், இந்த படம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்திருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் உட்பட பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=_FrShKHZNQY

தியாகராஜன் சொன்னது:

அப்போது விழாவில் தியாகராஜன், ஒரு நாள் ஷூட்டிங்கில் எமோஷனலான காட்சி வேண்டும் என்று வனிதாவை கெட்ட வார்த்தையில் திட்ட சொல்லி இருந்தேன். அவர் ஓ*, ஓ*ம், கொ** என்று பயங்கரமாக பேசியிருந்தார். நிறைய தகாத வார்த்தையில் பேசியிருந்தார். காது கொடுத்து கூட கேட்க முடியவில்லை. அங்கிருந்தவர்கள் சென்சாரில் போட முடியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நான், எமோஷன் இப்பதான் வருகிறது, விடு பார்க்கலாம் என்று சொன்னேன்.

https://www.youtube.com/shorts/Ht4lDBCKlTw

வனிதா குறித்து சொன்னது:

அந்த அளவிற்கு வனிதா பேசியிருந்தார். அவர் யாரை மனதில் நினைத்து பேசினார் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு காட்சி என்று வந்துவிட்டால் சின்சியராக நடித்து கொடுத்தார். கண்டிப்பாக இந்த படம் வனிதாவுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். அதோடு தியாகராஜன் கெட்ட வார்த்தை சொல்லி பேசும் போது நடிகர் பிரசாந்த் தடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து விழாவில் சமுத்திரக்கனி, படப்பிடிப்பில் ஒரு நாள், வனிதா கெட்ட கெட்ட வார்த்தைகளால் சராமரியாக என்னை திட்டி இருந்தார்.

சமுத்திரகனி சொன்னது:

இதை நான் தியாகராஜனிடம், ஏன் இப்படி வனிதா என்னை திட்டுகிறார்? என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே நான், காட்சிக்காக தான் கொஞ்சம் அவரை திட்டு என்று சொன்னேன். ஆனால், அவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார். எப்படி எல்லாம் பேச வேண்டுமோ, அப்படி எல்லாம் பேசி முடித்து விட்டார். காது கொடுத்து அந்த வார்த்தைகளில் கேட்க முடியவில்லை என்று சொன்னார். உடனே இதைக் கேட்டு மேடையில் இருந்த எல்லோருமே சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full