2024 தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சியை தமிழகத்தில் இருக்காது. பாஜகவே அதிமுகவை அழித்து விடும்.- திருமாவளவன் பரபரப்பு.

By Dhilip Kumar · 7/9/2023

உதயநிதி பேசியதை வைத்து INDIA கூட்டணியில் இருந்து திமுகவை பிரிக்க திட்டமிட்டு வருகின்றனர் என்று திருமாவளன் கூறியிருந்தார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரங்கள் மிகவும் பரப்பரப்பாக இருந்து வருகிறது. இதில் ஒரு தரப்பினர் அவர்களுடைய கருத்து கூற அதற்க்கு எதிரணியில் இருப்பவர் மற்றொரு கருத்தை கூற என பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

உதயநிதி பேசியது:

சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம்.

திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது ஆனால் ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது. நாம் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க திட்டங்களை கொண்டு வருகிறோம் ஆனால் பாசிஸ்ட்கள் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க கூடாது என்று செயல் பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் படிக்க கூடாது என்பது தான் அவர்களுடைய எண்ணம். அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம்.

மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறோம். இது வரை இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களை உருவாக்கியது தான் தமிழ்நாடு. ஆனால் அதை சிதைக்கவேண்டும் என்று கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. சிலருக்கு நிச்சயம் வயிற்று எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும் என்றும் அவர் பேசியிருந்தார். இதற்க்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க ஒரு சாமியார் அவரின் தலையை கொண்டு வந்தால் 10 கோடி தருகிறேன் என்று சர்ச்சையை கிளப்பினார்.  

திருமாவளன் பேச்சு

இந்திய கூட்டணியில் இருந்து திமுகவை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. இந்திய கூட்டணி உருவாகி எடுத்த நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. திமுகவின் தலைவர் ஸ்டாலின் இல்லாமல் இந்திய போட்டு நீங்க கிடையாது. அமைச்சரின் கருத்து பேசுவது 100%. ஆர் எஸ் எஸ் வெறுத்த வலையில் சிக்காமல் இந்துக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசியதற்கு ஒரு சாமியார் தலையை வெட்டினால் 10 கோடி என அறிவிக்கிறார். இந்த அறிவிப்பு என்பதே தீவிரவாதம்தான்.

https://youtu.be/vCGsBQCKHCY?si=n2aNhU7AApzLKfOe

சனாதனம் என்பது எவ்வளவு பயங்கரவாதம் நிறைந்த கோட்பாடு என்பதற்கு இந்த அறிவிப்பே ஒரு சான்று தான். தமிழகத்தில் பாஜக கொண்டு வருவது என அனைத்திற்கும் முட்டுக் கொடுப்பதுதான் அதிமுகவிற்கு வேலை. 2024 தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சியை தமிழகத்தில் இருக்காது அது எங்கே இருக்கிறது என்று அனைவரும் தேட நிலை ஏற்படும். பாஜகவை அதிமுகவை அழித்துவிடும் என்று திருமாவளவன் பேசியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full