தன் வீட்டின் முன் இருந்த மழை நீரில் கால் படாமல் தொண்டர்களை சேர் போட வைத்து காரில் ஏறிய திருமாவளவனின் வீடியோ சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் திருமாவளவன். சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் திருமாவளவன் டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டிப்டாப் உடையணிந்த வீட்டை விட்டு வெளியே வந்த போது தன்னுடைய வீட்டின் முன் தேங்கியிருந்த தண்ணீரில் கால் படாமல் இருக்க தன்னுடைய தொண்டர்களின் உதவியோடு ஒன்றின் பின் ஒன்றாக சேர் போட்டு நடந்து கார் வரை சென்றார்.

திருமாவளவனின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாதி ஒழிப்பு குறித்தும் அடிமைத்தனம் இருக்க கூடாது என்றும் கோசம் போடும் திருமாவளவன் தனது தொண்டர்களை அடிமை போல நடத்துவதா என்று விமர்சனங்கள் எழுந்தது. மழைநீரில் கால் நனையாமல் இருப்பதற்காக, திருமாவளவன் தன் தொண்டர்களை நடத்தும் விதத்தை பாருங்கள் என பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சி இணையவாசிகள் விமர்சனத்தை முன்வைத்தனர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள திருமாவளவன் ‘டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஏர்போர்ட் போகும்போது ஷூ நனைந்து, கால் நனைந்து, ஷாக்ஸ் நனைந்து விமானத்தில் 3 மணி நேரம் அமரமுடியாதல்லவா? சேறு அறியாத, சகதியை சந்திக்காத காலில்லை என்னுடையது. மழை வெள்ளத்தில் சென்னையின் எல்லா இடங்களிலும் இறங்கி, சேறு, சகதிகளை அள்ளியிருக்கிறோம். மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியிருக்கிறோம்.

அது என்னுடைய வீட்டுக்கு அருகிலிருக்கும் தண்ணீர். மக்களை பார்க்கப்போகும்போது நான் அப்படி செய்யவில்லை. அது சாக்கடைக் கலந்த தண்ணீர். அவசரமாக புறப்பட்டபோது, நான் கீழே விழாமலிருக்க தொண்டர்கள் என்னை பிடித்துக்கொண்டனர். தோழர்களை குறைத்து நடத்தும் போக்கு என்பது என்னுடைய இயல்பு கிடையாது’ என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement