அரசு என்றால் அதிகாரம், அதிகாரம் என்றால் ஆயுதம் - விடுதலை படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு திருமாவளவன் கொடுத்த விமர்சனம்.
விடுதலை படம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.படத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இதனால் தங்கள் இடமும் பறிபோய் விடும் என்று பயப்படுகிறார்.
இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். வழக்கம்போல் மக்கள் போராட ஆரம்பித்தால் அவர்களை அடக்கி ஒடுக்க வன்முறையை போலீஸ் கையில் எடுக்கிறது. இரக்கமில்லாமல் போலீஸ் மக்களிடம் நடந்து கொள்கிறார்கள். இந்த இரக்கமற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இரக்கமுள்ள கான்ஸ்டபில் ஆக நடிகர் சூரி இருக்கிறார். இவர் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்திற்கு நல்ல விமர்சங்கள் கிடைத்து வருகிறது.
சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 31, 2023
தோழர் வெற்றி..(2/3) pic.twitter.com/JTuckbAn1I
இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தோல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் 'தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்.
ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச்சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.
மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 31, 2023
மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது
'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார்.#வெல்க_விடுதலை! (3/3) pic.twitter.com/1xm9YRglsU
தோழர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.