12 வருடங்களுக்கு பின் மதகஜராஜா ரிலீஸ் ஆவதற்கு இது தான் - உண்மையை சொன்ன திருப்பூர் சுப்ரமணியம்

By subhashini · 6/1/2025

மதகஜராஜா படம் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சோசியல் மீடியா முழுவதும் மதகஜராஜா படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இதுதான் இவர்களுடைய முதல் படம். ஆனால், இவர்களுடைய கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு ஆம்பள படம் 2019 ஆம் ஆண்டு ஆக்சன் ஆகிய படங்களெல்லாம் வெளியாகியிருந்தது. இந்த இரண்டு படங்களுமே காமெடி ஜானரில் இயக்குனர் சுந்தர்.சி கொடுத்திருந்தார்.

இதில் ஆம்பள படம் சூப்பர் ஹிட் கொடுத்தாலும், ஆக்சன் படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை. இதனாலேயே மதகஜராஜா படம் வெளியாவதற்கு கொஞ்சம் தாமதமானது. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் விஷால், மை டியர் லவ்வர் என்ற பாடலை பாடி இருந்தார்.

மதகஜராஜா படம்:

அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு முன்பு தயாரித்த படங்களை விநியோகம் செய்வதில் சிக்கல் இருந்ததால் சில பிரச்சனை ஏற்பட்டு மதகஜராஜா படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது மதகஜராஜா ரிலீசுக்கு தயாராக இருப்பதாக பேச்சுகள் வந்தது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

படம் குறித்த தகவல்:

தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு தற்போது இந்த படத்தை திரையரங்க உரிமையாளரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் ஆன திருப்பூர் சுப்ரமணியம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான ஒரு பெரும் தொகையை பலருக்குமே செட்டில் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்பாக அளித்த பேட்டியில் திருப்பூர் சுப்ரமணியம், மதகஜராஜா படத்தை நான் வாங்கவே இல்லை. அது உண்மையும் கிடையாது. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்தது. 2012ல் சென்சாரும் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் தான் தயாரிப்பாளரோட சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் அவர்கள் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தார்கள். இருந்துமே அவர்கள் படத்தின் வெளியீட்டுக்கு நிறைய முயற்சி செய்துமே நடக்கவில்லை.

திருப்பூர் சுப்புரமணியம் பேட்டி:

அதன்பின் படத்தினுடைய ஹீரோவான விஷாலுமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்தார். அந்த முயற்சியுமே பலன் அளிக்கவில்லை. இப்போது தயாரிப்பு நிறுவனத்தின் குடும்பத்திலிருந்து தான் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி எடுத்து இருக்கிறார்கள். நான் உட்பட விநியோகஸ்தர்கள் 10 பேருக்கு அவர்கள் பணம் தர வேண்டி இருக்கிறது. இதனால் அவர்கள் எங்களை கூப்பிட்டு, நீங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த படத்தை ரிலீஸ் பண்ணுங்கள். இதில் வரும் பணத்தை நீங்கள் சேர்ந்து பிரித்துக் கொள்ளுங்கள். பணம் குறைவானால் உடனடியாக மீத பணத்தை செட்டில் செய்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார். அதோடு இந்த படத்தையும் எங்களுக்கு போட்டு காண்பித்திருந்தார்கள்.

சர்ச்சைகளுக்கு விளக்கம்:

பத்து வருடத்திற்கு முன்னாடி எடுத்த படம் இப்போது செட் ஆகுமா? என்ற எண்ணத்தோடு தான் படம் பார்த்தோம். ஆனால், படம் இந்த காலகட்டத்திற்கு கனெக்ட் ஆகும் படி தான் இருக்கிறது. தமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஆர்யா இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். படத்தை பார்த்து முடித்த கையோடு சுந்தர்.சியை அழைத்து நாங்கள் பாராட்டி விஷயத்தை சொன்னோம். அவருக்குமே சந்தோஷமாக இருக்கிறது. அப்போது சுந்தர் சி, படத்தை நானே கொண்டு வருகிறேன். ஒரு தொகையும் உங்களுக்கு கொடுக்கிறேன். அந்த தொகையை நீங்கள் எல்லோரும் பிரித்துக் கொள்ளுங்கள். ரிலீசான பிறகு ஓவர்ஃபுலோ ஆனாலுமே உங்களுக்கு கொடுக்கிறேன். குறைவானாலும் திருப்பி கேட்க மாட்டேன் என்றெல்லாம் சொன்னார். நானும் சரி என்று ஒத்துக் கொண்டேன். சுந்தர்.சி கொடுக்கக் கூடிய பணத்தை எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்க போகிறேன். படத்தை ரெட் ஜெயிண்ட் தான் ரிலீஸ் செய்கின்றது என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full