கைகாசை போட்டு வசூல் கணக்கை காட்டியுள்ள லியோ தயாரிப்பாளர் - புட்டு புட்டு வைத்த திருப்பூர் சுப்ரமணியன்.

By Arun · 27/10/2023

லியோ படத்தின் வசூல் குறித்து திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் லியோ படம் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும், உலக அளவில் முதல் நாளில் இந்த படம் 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. லியோ படம் ஏழு நாட்களிலேயே 478 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, லியோ படம் உருவானபோதிலிருந்தே பல சர்ச்சைகளை சிக்கி இருக்கிறது. படத்தின் கதை காப்பி, பாடல் சர்ச்சை, சம்பளம் விவகாரம் என பல பிரச்சனைகள் எழுந்து இருந்தது. அதிலும், குறிப்பாக ரிலீசுக்கு முன் பல பிரச்சினைகளை இந்த படம் சந்தித்திருந்தது.

லியோ படம் குறித்த சர்ச்சை:

அதில் ஷேர் பிரச்சனை தான் பரவலாக பேசப்பட்டது. லியோ படத்தை தமிழ்நாட்டில் முழுவதும் 7 ஸ்கிரின் நிறுவனம் தான் விநியோகம் செய்து இருந்தது. அப்போது இதுவரை இல்லாத அளவிற்கு 80 சதவீதம் ஷேர் தொகை லியோ படத்துக்கு கேட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் பலருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனாலே படத்தின் ரிலீசுக்கு முன் நாள் வரை சென்னையில் பல திரையரங்களில் முன்பதிவு நடக்காமல், படத்தை வாங்காமல் இழுத்து அடித்து இருந்தனர்.

https://twitter.com/itis_jj/status/1717804397554749912?s=48

திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி :

பின் ஒரு வழியாக பேச்சுவார்த்தை முடிந்து லியோ படம் வெளியாகியிருந்தது. தமிழகம் முழுவதும் 850 க்கும் மேற்பட்ட திரையரங்கில் தான் லியோ படம் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் லியோ படம் குறித்து திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், லியோ லாபகரமான படமாக எங்களுக்கு அமையவில்லை. காரணம், இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவு ஷேர் பங்கீடு வாங்கி இருக்கிறார்கள். பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை விரும்பி போடவில்லை.

லியோ ஷேர் குறித்த சர்ச்சை:

அந்த அளவு அதிகமான ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்களையும் கசக்கி பிழிந்து விட்டார்கள். படம் வசூல் அதிகமாக இருந்தாலும் அதில் எங்களுக்கு பிரயோஜனமே இல்லை. அவர்கள் இவ்வளவு தொகை ஷேர் கேட்டால் மீதி தொகை எங்களுடைய திரையரங்கு பராமரிப்புக்கே பத்தாது. இதே படத்தை பக்கத்து மாநில கேரளாவில் 60% வெளியிட்டு இருக்கிறார்கள். எங்களிடம் 80 சதவீதம் வாங்கி இருக்கிறார்கள். இது என்ன நியாயம்? இந்த படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால் இப்போது கிடைத்துள்ள தியேட்டரில் பாதி கூட லியோவுக்கு கிடைத்திருக்காது. வேறு படம் இல்லாததால் தான் இதை திரையிட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் திரையிட்டோம்

https://twitter.com/trollywoodx/status/1717763338481070474?s=48

லியோ வசூல் குறித்து சொன்னது:

மேலும், ஜெயிலர் படத்தினுடைய வசூலை முறியடிக்க தான் லியோ பட தயாரிப்பாளர் டார்கெட் செய்தார். இதற்காக லியோ படம் 461 கோடி வசூல் செய்தது என்று கூறினார். இது உண்மையிலேயே வசூல் செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை. அவரிடம் போய் யாராவது கணக்கா கேட்கப் போகிறார்கள்? தமிழகத்தில் 60 முதல் 70 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்த்திருக்கிறார்கள். குறிப்பாக திருப்பூர் சக்தி சினிமாஸில் காலை காட்சிக்கு 10 பேருக்கு மேல் வந்தால் தான் லியோ படம் திரையிடப்படும் என்று கூறப்பட்டிருந்தார்கள். ஆனால், அங்கு இருந்ததோ 5 பேர் மட்டும் தான். மற்ற ஐந்து பேருக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி லியோவின் நிலைமை நாளுக்கு நாள் பின்தங்கியே இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full