சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இந்த படம் அட்லீ தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்கிய படமாகும். பின் ராஜாராணி படத்தைத் தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் அவர்களின் “தெறி” படத்தை இயக்கினார்.

இயக்குனர் அட்லீ இந்த படத்தின் மூலமே ரசிகர்களிடையேயும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும்,அட்லீ விஜயை வைத்து ‘மெர்சல்’படம் இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் படமாக மாறியது.இதை தொடர்ந்து விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்து பிகில் படத்தை இயக்கி இருந்தார்.

Advertisement

அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியாக பிகில் படம் வரை அட்லீ இயக்கும் படங்களின் காட்சிகள் காபி தான் என்று பல ஆதாரங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ராஜா ராணி – மௌன ராகம், தெறி – சத்ரியன். மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் பிகில் – சக்தே இந்தியா என்று பல கிண்டல்கள் அட்லீ மீது முன்வைக்கப்பட்டு தான் வருகிறது.

அட்லீ படத்தில் இடம்பெற்ற எத்தனையோ காட்சிகள் வேறு ஒரு படத்தில் இருந்து சுட்டதுதான் என்று நெட்டிசன்கள் பல ஆதாரங்களை அவ்வப்போது வெளியிட்டு தான் வருகின்றனர். இந்த நிலையில் தெறி படத்தில் வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சியும், மெர்சல் படத்தில் வந்த விஜய்யின் என்ட்ரி காட்சியையும் போன்றே வேறு படத்தில் இடம்பெற்ற காட்சிகளின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement