தனது பெயருக்கு முன்னாள் மாஸ்டர் என்று மாற்றிக்கொண்ட மாஸ்டர் பட இளம் நடிகர்.

By Rajkumar · 17/3/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

https://twitter.com/Actor_Mahendran/status/1239571743435411456

இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு தான் ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ், சாந்தனு, சேத்தன்,கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஷோபா, சந்திரசேகர், அனிருத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும், இந்த படத்தில் பல துணை நடிகர்கள் நடிக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பரீட்சயமான நடிகர் மகேந்திரன் இந்த படத்தில் நடிக்கிறார். நடிகர் மகேந்திரன் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதற்கு பிறகு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். பின் இவருக்கு பெரிதும் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

https://www.youtube.com/watch?v=e9w72A9gYx8&feature=youtu.be

சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவர் விஜய் உடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சாரக் கண்ணா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பல வருடங்கள் கழித்து மீண்டும் மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து மகேந்திரன் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் மகேந்திரன் அவர்கள் தன்னுடைய பெயரை மாஸ்டர் மகேந்திரன் என்று டுவிட்டரில் மாற்றியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியது,

முதல்ல என்னை மாஸ்டர் மகேந்திரன் என்று என்னைக் கூப்பிடும் போது எனக்கு பிடிக்காது. ஏன்னா, நான் சின்ன வயசில் இருந்தே நடிக்கிறதுனாலே என்னை மாஸ்டர் மகேந்திரன் என்று சொல்லுவார்கள். இப்ப இந்த மாஸ்டர் வந்து வேற. இந்த மாஸ்டர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, இந்த மாஸ்டரில் எங்க தளபதி இருக்கிறார். அதனால் தான் நான் என் பெயரை மாஸ்டர் மகேந்திரன் என்று மாற்றிக்கொண்டேன். இந்த பெயர் என்றும் நிலையானது.

மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் மகேந்திரன்

இந்த மாஸ்டர் படம் தான் எனக்கு இன்னிங்ஸ் படம். ஆறு, ஏழு வருடத்திற்கு பிறகு நான் அவரைப் பார்த்தேன். எல்லோருடைய பெயரும் ஆன் போர்ட்டில் இருக்கும் போது என் பெயர் ஏன் வரவில்லை என்று பல முறை கேட்டேண். அதுக்கு லோகேஷ் அண்ணா, எல்லாரும் சொல்றாங்க சொல்றாங்க மட்டும் தான் நீ பார்க்கிராய். ஒரு விஷயத்துல உன்னை மறைகிறேன் என்றால் அதுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்று உனக்கு காத்திருக்கும் என்று சொன்னார். அதை நான் இசை வெளியிட்டு விழாவில் பார்த்தேன் என்று சொன்னார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full