நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல போராட்டங்கள், பிரச்சனைகளை கடந்து மாநாடு படம் வெளியானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் சிம்புவை கொண்டாடி வருகின்றனர். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த சிம்புவிற்கு மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் இயக்கி தயாரித்திருக்கிறார்.

வீடியோவில் 30 நிமிடத்தில் பார்க்கவும்

மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் டைம் லூப் என்ற ஒரு புதிய கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதோடு திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. மேலும், படத்தில் சிம்புவிற்கு அடுத்து அதிகமாக கவர்ந்த கதாபாத்திரம் எஸ் ஜே சூர்யா தான்.

Advertisement

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா தனுஷ்கோடி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிகர் அரவிந்த்சாமி தான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். தனி ஒருவன் படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியின் வில்லத்தனத்தை பார்த்து வெங்கட்பிரபு முதலில் இந்த கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார். பின் அவரிடம் கதை சொல்லி ஓகே செய்து விட்டார்.

ஆனால், ஆரம்பத்தில் மாநாடு படம் எடுப்பதில் பல பிரச்சனைகள் இருந்தபோது அரவிந்த்சாமி அப்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். பின் மீண்டும் மாநாடு படத்தை இயக்கும் போது அரவிந்த்சாமி கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. அதற்கு பிறகு வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் ரவிதேஜாவிடம் இந்த கதையை சொன்னாராம். சிம்புவும் அவரிடம் இந்த படம் குறித்து பேசினாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Advertisement
Advertisement