ராஜா ராணி 2 வில் சித்துவிற்கு முன் ஒரு சில காட்சியில் நடித்தது இந்த விஜய் டிவி நடிகர் தானாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியலில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. ராஜா ராணி 2 சீரியல் ரீமேக் சீரியலாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் ஹீரோவாக சித்துவும், ஹீரோயினியாக ஆலியா மானசா நடிக்கிறார்கள். சித்து அவர்கள் இதற்கு முன்னாடி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நடித்திருந்தார். இந்நிலையில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் சித்து கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் தற்போது வேலைக்காரன் சீரியலில் நடித்து வரும் சபரி தான் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர் தான் வேலைக்காரன். லாக்டோன் காலகட்டத்தில் தான் இந்த சீரியல் வெளிவந்தது. தற்போது இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலை அனைவரும் ரஜினிகாந்தின் முத்து படத்தின் காப்பி என்று விமர்சனங்களை செய்து வந்தாலும் சீரியலில் கதாநாயகன் சபரியின் நடிப்பை பார்த்து மக்கள் மத்தியில் விருப்ப தொடராக மாறிவிட்டது.
இதையும் பாருங்க : அட்ஜெட்மென்ட் தான், இல்லனா விஜய் டிவில சான்ஸ் கிடைக்காது - ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து அலர்ட் செய்த அனிதா சம்பத்.
வேலைக்காரன் சீரியலில் வேலன் கதாபாத்திரத்தில் சபரிநாதன் நடிக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஆர் ஜே, வி ஜே, மாடல், மோட்டிவேஷன் ஸ்பீக்கர் என பன்முகங்கள் கொண்டிருந்தார்.சினிமாவில் எப்படியாவது நல்ல நடிகராக வேண்டும் என்ற கனவோடு பல ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். அதிலும் இவர் நடித்த மௌனம் பேசியதே ஷார்ட் பிலிம் நல்ல விமர்சனத்தை கொடுத்தது. அதை பயன்படுத்தி தான் இவர் விளம்பரங்கள், மாடலிங் செய்து வந்தார்.
யூடியூப் சேனலில் வெப் சீரியலிலும் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு வந்தது. விஐபி-2, துப்பரிவாளன், சைகோ, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நட்பே துணை என பல படங்களில் துணை நடிகராக நடித்தார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
https://www.youtube.com/watch?v=66hF2C2eXXU
மேலும், விஜய் டிவியின் பிரபல இயக்குனர் பிரவீன் இவருடைய நெருங்கிய நண்பர். நண்பர் மூலம்தான் சபரிக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலாக இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் ரியோ உடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில காரணங்களால் பறிபோனது. பின் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் லீட் ரோல் வாய்ப்பும் தடையானது. தற்போது ராஜா ராணி சீரியலில் சரவணனாக சபரி நடித்த சில காட்சிகள் எடுத்தபின் கடைசி நேரத்தில் இவருக்கு பதிலாக தான் சித்து தேர்வானார். இப்படி ஏகப்பட்ட ஏமாற்றங்களையும் அவமானங்களையும் சந்தித்த சபரிக்கு வேலைக்காரன் சீரியல் மூலம் ஒரு மன திருப்தி கிடைத்தது. இதை பிரபல யூடியூப் சேனலுக்கு கண்கலங்கியபடி சபரி பதிவிட்டிருந்தார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.