இரண்டாவது திருமணத்திற்கு ஓகே சொன்ன பிரசாந்த் - இம்முறை அரேஞ்ச் மேரேஜா இல்லை லவ் மேரேஜா?
பிரபல நடிகர் பிரசாந்தின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் 'ஆண் அழகன்' என்ற பட்டத்தை பெற்ற நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாத் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த வெற்றி படம் என்றால் அது 'வின்னர்' தான்.
அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்துள்ளது. பின் படிப்படியாக இவருடைய மார்க்கெட் சினிமாவில் குறைய தொடங்கியதால், பிரசாந்த் இருக்கும் இடம் தெரியாமல் போனார். அதோடு உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு பிரசாந்த் மாறினார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் நடிகர் பிரசாந்துக்கு சினிமாவில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது அவர்கள் திருமண வாழ்க்கை தான்.
பிரசாந்தின் திருமணம்:
நடிகர் பிரசாந்துக்கு கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்ற பெண்ணை பெற்றவர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆகி சில நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரசாந்த் மற்றும் மனைவி மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். பின் நடிகர் பிரசாந்தை விட கிரகலட்சுமி வயது அதிகமானவர் என்பதும், இவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூட சில சர்ச்சைகள் எழுந்தது.
பிரசாந்த் கம் பேக்:
திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தால் நடிகர் பிரசாந்த் மன உளைச்சலுக்கு ஆளாக சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். பின் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த பிறகுதான் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2011 இல் கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பொன்னர் சங்கர்' என்ற படம் மூலம் கம் பேக் கொடுத்தார். அதற்குப் பிறகு மம்பட்டியான், புலன் விசாரணை 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தியாகராஜன் பேட்டி:
இந்நிலையில் தற்போது 51 வயதாகும் பிரசாந்திற்கு திருமணம் செய்து வைக்க அவரின் தந்தை முடிவு செய்துள்ளார். இந்த முறையும் வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று பிரசாந்த் உறுதியாக இருக்கிறாராம். இதனை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில், ' பிரசாந்த் நடிக்கும் படங்கள் வெளியானதும், பெண் பார்க்க ஆரம்பிக்க வேண்டும். பிரசாந்த் வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிவிட்டார். இந்த முறை நன்கு விசாரித்து பெண் எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
பிரசாந்த் நடிக்கும் படங்கள்:
தற்போது பிரசாந்த் தன்னது தந்தையின் இயக்கத்தில் 'அந்தகன்' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'கோட்' படத்திலும் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.