மலையாள இயக்குனர் ஜார்ஜ் கோரா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் தோல்வி எப்சி. இந்தப் படத்தில் பர்த்தின் ஜானி ஆண்டனி, ஷரபுதீன், ஜார்ஜ் கோரா, ஆஷா மடத்தில், மீனாட்சி ரவீந்திரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தற்போது அமேசான் பிரைம் தளத்தில் (link) கூட இருக்கிறது. இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் காணலாம்.

கதைக்களம்:

படத்தில் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள். இவர்கள் விக்டரி ஹில் என்ற வீட்டில் வாழ்கிறார்கள். இந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவருமே தோல்வி அடைந்தவர்கள் தான். இந்த குடும்பத்தில் தலைவன் குருவிலா. இவர் கிரிப்டோகரன்சி மோசடியில் தன் பணத்தை இழக்கிறார். இவருடைய மனைவி சோஷா. இவருக்கு நாவலாசிரியராக வேண்டுமென்று ஆசைப்படுகிறார். ஆனால், அதுவும் நடக்கவில்லை.

Advertisement

இவருடைய மகன் உம்மன். தொழிலதிபராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இருந்தாலும் டீக்கடை தான் வைக்க முடிகிறது. அதிலும் இவர் தோல்வியை சந்திக்கிறார். இவர்களுடைய இளைய மகன் தம்பி. இவர் கால்பந்து பயிற்சியாளராக முயற்சி செய்கிறார். ஆனால், அதிலும் இவருக்கு தோல்வி கிடைக்கிறது. இப்படி இவர்கள் நாலு பேருடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள், தோல்விகள் நிறைந்து இருக்கிறது.

இறுதியில் பிரச்சனைகள் தீர்ந்ததா? இவர்கள் தங்களுடைய லட்சியத்தில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தோல்வி அடைந்தால் அதை எப்படி ஒன்றிணைக்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் கதை. படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால், சில கதாபாத்திரங்கள் எதற்கு படத்தில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Advertisement

குறிப்பாக டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தம்பியின் மாணவர்களின் பெற்றோர்கள், அவருடைய நண்பர்கள், அவர்களுடைய குடும்பம் என்று பல கதாபாத்திரங்கள் கதையின் நோக்கை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது. திரைக்கதை நன்றாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதமும் காட்சிகளையும் காண்பிக்கும் விதத்தில் இயக்குனர் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். எடிட்டரும் படத்திற்கு இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம் என்று சொல்லலாம்.

Advertisement

படம் முழுவதும் போட்டிகள், பிரச்சினைகளை காண்பிப்பது இன்னும் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பையும் சலிப்பையும் தான் ஏற்படுத்தி இருக்கிறது. கடைசியில் எல்லா கதாபாத்திரங்களின் பிரச்சினைகளையும் தீர்ந்ததா? இல்லையா? இதை இயக்குனர் கையாண்ட விதம் ஓகே. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம் ஓகே

இயக்குனர் உடைய புது முயற்சி

குறை:

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

பாடல்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை

சில கதாபாத்திரங்கள் தேவையில்லை

மொத்தத்தில் தோல்வி எப்சி – ஒரு Feel Good படம். Week Endல் பார்க்க ஒரு சிறப்பான தேர்வு

Advertisement