கமல், கல்பனா சாவ்லாவுக்கு சித்தப்பா பையனா? 'தக் லைஃப்' படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்

By subhashini · 6/6/2025

தக் லைஃப் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல். கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலுமே வெளியாகி இருக்கிறது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தக் லைப் படம் தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தக் லைஃப் படம்:

அதில் அவர், சிம்புவின் அப்பாவை சுட்டுக் கொல்லப்படுவதால் கமல் எடுத்து வளர்க்கிறார். சிம்புவின் தங்கையை கண்டுபிடித்து தருவதாகவும் சொல்கிறார். சிம்புவின் தங்கை சந்திராவை தேடி செல்லும் கமலுக்கு திரிசா தான் கிடைக்கிறார். திரிஷாவுடன் கமல் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் திரிஷாவை எப்படியாவது அடைய வேண்டும் என்று சிம்புவும் போட்டி போடுகிறார். இதனால் கமலுக்கும் சிம்புவுக்கும் இடையே போட்டி நடக்கிறது.

https://www.youtube.com/watch?v=BDdcKSeAmwc

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

இதை தான் கேங்ஸ்டர் படம் என்று சொல்கிறார்கள். ஆனால், கேங்ஸ்டர் படத்திற்கான எந்த ஒரு சீனுமே
படத்தில் இல்லை. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்? என்பது கூட தெரியவில்லை. படத்தில் கொஞ்சமும் லாஜிக் இல்லை. கமல் ஜெயிலுக்கு போனால் அங்கு கூட திரிஷா வருகிறார். ஜெயிலில் கூட திரிஷாவுடன் கமல் லூட்டி செய்து கொண்டிருக்கிறார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகும் கமல் ஆக்ஷனில் இறங்குவார் என்று பார்த்தால் திரிஷா வீட்டுக்கு போய் ஜாலியாக இருக்கிறார். அதற்கு பின் அபிராமி வீட்டிற்கு போய் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்.

கமல் பற்றி சொன்னது:

இதில் எங்கே கேங்ஸ்டர் கதை இருக்கு? பேரன் பேத்தி எடுத்த வயதில் கராத்தே கற்றுக்கொண்டு அதற்குப் பிறகு கேங்ஸ்டர் என்று சொல்லி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். தீ பாடிய முத்தமலை பாடல் படத்திலேயே இல்லை. படம் முடியும்போது விண்வெளி நாயகா பாடல் வருகிறது. விண்வெளிக்கும் கமலுக்கும் என்ன தொடர்பு? அவர் என்ன கல்பனா சாவ்லாவுக்கு சித்தப்பா பையனா? சுனிதா வில்லியம்ஸ்க்கு பெரியப்பாவா? என்னதான் படம் எடுக்கிறானுங்க? ஏதாவது ஒரு லாஜிக் இருக்குதா? புலி மார்க் சீயக்காய் தூளில் புலிக்கும் சீயக்காயிக்கும் என்ன சம்பந்தம். அது போல தான் இது இருக்கிறது என்று கூறியிருக்கிறார்

கதைக்களம்:

படத்தில் கமலஹாசன் டெல்லியில் தாதாவாக இருக்கிறார். இவருக்கும் தாதா மகேஷ் என்பவருக்கும் இடையே தான் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த தாதா கேங்கை அழிக்க போலீஸ் திட்டமிடுகிறது. இதனால் போலீசுக்கும் கமலுக்கும் இடையே நடந்த தகராறில் சிம்புவுனுடைய அப்பா கொல்லப்படுகிறார். சின்ன வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து சிம்பு அனாதையாக நிற்கிறார். அதோடு அந்த பிரச்சனையில் தன்னுடைய தங்கையையும் விட்டு பிரிகிறார் சிம்பு. அதற்குப் பின்னால் கமலஹாசன், சிம்புவை எடுத்து வளர்க்கிறார். தன்னுடைய சாம்ராஜ்யத்தின் அடுத்த அரசனாக சிம்புவை ஆக்க கமல் நினைக்கிறார். இதற்கிடையில் கமலஹாசனை கொள்ளவும் சதி நடக்கிறது.

அதற்குப்பின் தனக்கடுத்து சிம்பு தான் என்று எல்லோரிடமும் கமல் சொல்கிறார். அந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக கமலஹாசன் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதில் கமலஹாசன் அடிபட்டு ஹாஸ்பிடலும் இருக்கிறார். ஆனால், இதை சிம்பு தான் செய்ய சொன்னார் என்று கமல் தவறாக புரிந்து கொள்கிறார். இதையெல்லாம் அறிந்த சிம்பு மனம் உடைந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் சிம்புவே கமலஹாசனை கொல்லவும் நினைக்கிறார். இதை அறிந்த தாதா குரூப், சிம்புவையும் கமலையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். சிம்புவும் கமலை கொல்ல ஆக்ரோஷமாக திட்டமெல்லாம் போடுகிறார். இறுதியில் சிம்புவின் சதி திட்டம் பலித்ததா? கமலஹாசனுக்கு என்ன ஆனது? மற்ற தாதாக்களின் எண்ணம் நிறைவேறியதா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full