மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது - கமல் அடுத்த அதிரடி முடிவு , நீதிமன்றம் போட்ட உத்தரவு
தக் லைப் பட விவகாரம் தொடர்பாக கமல் எடுத்து இருக்கும் அதிரடி முடிவு தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக கமலின் கன்னட மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த தக் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது.
இந்த விழாவிற்கு தக் லைப் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் வருகை தந்திருந்தார். அப்போது விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே. சிவராஜ்குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். அதனால் தான் உயிரே உறவே தமிழே என்று பேச தொடங்கினேன். உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது. எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது என்று கூறி இருந்தார். இப்படி கமலஹாசன் பேசியிருந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. காரணம், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று அவர் கூறியிருப்பார். இதனால் கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் வெடித்திருக்கிறது.
கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள்:
கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட தீவிர கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக கன்னட ரக்ஷனா வேதிகே தலைவர், கன்னடா தமிழுக்கு பிறகு பிறந்ததாக கூறியிருக்கிறார். உங்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு கர்நாடகாவில் தொழில் வேண்டுமா? இருந்தும் கன்னடத்தை அவமதிப்பீர்களா? உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறி இருந்தார்.
கமல் தொடர்ந்த வழக்கு:
இதை அடுத்து கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு கமலஹாசன் தரப்பில் விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டாலும் கர்நாடகாவில் அவருடைய படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று சில அமைப்புகள் அழைப்பும் விடுத்திருக்கின்றது. இதை அடுத்து கமலின் தக் லைப் படம் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. நேற்று கமல் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், என்னுடைய தக் லைப் படத்தை வெளியிட கர்நாடக அமைப்பு மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது. பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=0e1U4p_jOCg
வழக்கு விசாரணை:
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது கர்நாடகா நீதிபதி, மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிந்திருக்கும். மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் கமலஹாசன், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது. நான் சொன்னது, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடாது என்பதை சொன்னேன் என்று கூறியிருந்தார்.
கமல் முடிவு:
இதை எடுத்து பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நீங்கள் அனுப்பிய கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை. மன்னிப்பு கேட்பதில் உங்களுக்கு அப்படி என்ன ஈகோ? எதற்காக சுற்றி வளைத்து பேசுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு கமல், என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகுவதை ஒத்தி வைப்பதாக கமல் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 10ஆம் தேதி ஒத்து வைத்திருக்கிறார்கள்.