வாரிசு வாழ்நாள் சாதனையை சில மணி நேரங்களில் தும்சம் செய்த துணிவு போஸ்டர்.

By Rajkumar · 22/9/2022

விஜய்யின் வாரிசு படத்தின் வாழ்நாள் சாதனையை சில மணி நேரங்களிலேயே அஜித்தின் துணிவு படம் அடித்து நொறுக்கி மாஸ் காட்டிருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார்.

துணிவு படம்:

மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையாம்.

துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் :

அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், நேற்று மாலை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. போஸ்டர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் வாரிசு படத்தின் வாழ்நாள் சாதனையை அஜித்தின் துணிவு படம் முறியடித்திருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் -அஜித் பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

அதாவது, கடந்த ஜூன் மாதம் தான் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுவரை 23.5K ரீ ட்விட்ஸ் மற்றும் 72K Hearts வாங்கி இருக்கிறது. ஆனால், நேற்று மாலை வெளிவந்த அஜித்தின் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 27K ரீ ட்விட்ஸ் மற்றும் 79.4K Hearts வாங்கி இருக்கிறது. ஆகவே, வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வாழ்நாள் சாதனையை அஜித்தின் துணிவு படம் முறியடித்து இருக்கிறது.

வாரிசு படம்:

ஆனால், இது தயாரிப்பாளர்களின் பதிவுகளை மட்டுமே வைத்து ஒப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், யோகி பாபு, நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full