திருநங்கைகளை பற்றி தயாராக பேசிய டிக் டாக் திவ்யா - நேரில் சென்று வெளுத்த திருநங்கைகள். கதறிய திவ்யா. வைரல் வீடியோ.

By Rajkumar · 21/5/2021

திருணங்களைகளை பற்றி தவறாக பேசியதால் டிக் டாக் திவ்யா பெரும் சர்ச்சையில் சிக்கி திருநங்கைகளிடம் தர்ம அடி வாங்கியுள்ளார். கார்த்தி மாமா ஐ லவ் யூ என்று டிக்டாக்கில் கார்த்தியை தேடி அலைந்த திவ்யாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் திவ்யா கள்ளச்சி என்ற பெயரைக் கொண்ட இவரும் டிக்டாக்கில் மிகவும் பிரபலம் தான். தன்னை கார்த்தி என்பவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக அடிக்கடி டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டு வந்தார்.

https://www.youtube.com/watch?v=NfQno_je-TA

கார்த்திக்காக பாடல் பாடுவது, கார்த்திக்காக சமையல் செய்வது கார்த்திக்காக ஊர் ஊராக சென்று கார்த்தி குறித்து விசாரிப்பது என்று பல்வேறு வீடியோக்களை இவர் பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் அனைத்தும் படு வைரல் தான்.கார்த்தி ஐ லவ் யூ என்று இவர் சொன்னதை விட இவர் கார்த்திகை வசை பாடியது தான் மிகவும் அதிகம். மேலும், இவர் கார்த்தியை கண்டுபிடித்து தரச்சொல்லி போலீசிடம் கூட புகாரை கொடுத்திருக்கிறார். அதேபோல கார்த்தியை கண்டுபிடித்து தரச்சொல்லி போலீஸ் நிலையம் முன்பு இவர் தனி ஒரு நபராக போராட்டத்தை கூட நடத்தி இருக்கிறார்.

இதையும் பாருங்க : நிறைய பேரை இழந்துவிட்டேன், நீயும் சிரஞ்சீவியுடன் இருப்பாய்னு நம்புறேன் - மேக்னா பதிவிட்ட உருக்கமான பதிவு.

இதனால் போலீசார் இவரை பலமுறை எச்சரித்தும் இருக்கிறார்கள். டிக்டாக் தடை செய்தாலும் இவரின் கார்த்திக்கான தேடல் இன்னும் ஓயவில்லை.இப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் இவரும் சுகந்தி என்ற மற்றொரு டிக் டாக் பிரபலமான பெண்ணும் கலந்து கொண்டார்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. ஆனால், அந்த நிகழ்ச்சியின் இறுதியில் கார்த்தி என்ற ஒரு நபரே இல்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்து வழங்கிவிட்டார்.

https://www.youtube.com/watch?v=PxFczx6Ac8s

எப்போதும் கார்த்தி பற்றி பேசும் டிக் டாக் திவ்யா, சமீபத்தில் திருநங்கைகளை பற்றி இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ பல திருநங்கைகள் ஒன்று சேர்ந்து இவரது வீட்டிற்கே சென்றுவிட்டனர். மேலும், திருநங்கைகளை பற்றி தவறாக பேசியதால் திவ்யாவை வெளுத்து வாங்கிய திருநங்கைகள், அவரை காலில் விழ வைத்து இனி யாரை பற்றியும் தவறாக பேசக் கூடாது என்று பாடம் புகட்டியுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full