நீ என்ன பத்தினியா மாறிட்டயான்னு கேக்குறாங்க- டிக் டாக் இலக்கியாவின் உருக்கமான பேச்சு

By Rajkumar · 12/9/2024

டிக் டாக் பிரபலம் இலக்கியா சமீபத்தில் அளித்த பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபகாலமாக சமூக வலைத்தளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்ஸ்மாஷ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும், ஆண்கள் விதவிதமாக வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும், அந்த வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. அந்த அற்ப லைகஸ்க்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அப்படி கவர்ச்சியான வீடியோக்கள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர்தான் இலக்கியா. இவர் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து எல்லை மீறிய தாறுமாறான கிளாமர் காட்டி இளம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்.

டிக் டாக் இலக்கியா குறித்து:

பின், டிக் டாக் செயலியை தடை செய்த பிறகு, தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயல்களில் தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஆரம்ப காலத்தில் இவர் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். ஆனால், சினிமா இவருக்கு கை கொடுக்கவில்லை. அதனால் மீண்டும் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோக்களை போட்டு சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலில் இவர் நடிகை ஷகிலாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இலக்கியா பேட்டி:

அதில், நான் எப்போதும் தனியாகத்தான் இருப்பேன். அப்படி தனியாக இருக்கும்போது நிறைய விஷயத்தை நினைத்து கவலைப்பட்டு அழுது இருக்கிறேன். ஆனால், வாழ்க்கை எனக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுத்ததால், இப்போது எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனநிலை எனக்கு வந்துவிட்டது. இப்போதெல்லாம் நான் பெரிதாக எதற்கும் கவலைப்படுவதில்லை. என்ன பிரச்சனை வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.

புதிய குக்கிங் சேனல்:

முதலில், நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்புகள் தேடி அலைந்திருக்கிறேன். ஆனால், எனக்கு நல்ல வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இப்போது ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நான் நடனம் ஆடி இருக்கிறேன். சமீபத்தில் புதிதாக குக்கிங் சேனல் ஒன்று தொடங்கி இருக்கிறேன். அதற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நான் எனது 8 வயதில் இருந்தே சமையல் செய்து வருகிறேன். அதனால், எனக்கு சமையலில் ஆர்வம் அதிகம். மேலும், இனி கவர்ச்சி காட்டாமல் இருக்க வேண்டும் என்று வீடியோக்கள் போடுவதில்லை.

https://www.youtube.com/watch?v=J8C2YNaHuDs

பத்தினியா மாறிட்டியா:

அதற்கும் சில பேர் இனிமே காட்ட மாட்டியா? என்றும் பத்தினியா மாறிட்டியா? என்றும் என்னை கேலி செய்து கமெண்ட் போடுகிறார்கள். கவர்ச்சியாக வீடியோ போட்டாலும் திட்டுறாங்க. சமையல் வீடியோ போட்டாலும் திட்டுறாங்க என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், என்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிந்தது. அதிலிருந்து எனக்கு யாரும் மீது நம்பிக்கை வரவில்லை. ஒருவேளை என் வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதர் வந்தால், திருமணம் குறித்து யோசிப்பேன், இல்லையென்றால் இப்படியே இருந்து விடுவேன் என்று இலக்கியா கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full