சமூக வலைதளமான டிக் டாக் மூலம் பலர் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் டிக் டாக் சூர்யா. இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக்டாக்கில் இவர் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்து கொண்டார். இந்த பெயரின் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர். மேலும், இவர் வெளியிடும் வீடியோக்களில் முரட்டுத்தன சுபாவங்களை வெளிப்படுத்துவதால் ‘ரவுடி பேபி சூர்யா’ என அழைக்கப்படார். நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார்.

இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை விட ஹேட்டர்ஸ்கள் தான் அதிகமாக இருந்து வருகிறார்கள். மேலும், இவர் டிக்டாக்கில் இருந்தபோது இவர் மீது பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூட வைத்திருந்தார்கள். அதேபோல பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் தான் ஒரு சிலருடன் தவறான உறவில் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது திருந்தி ஒரு நல்ல மனுஷியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியிருந்தார். சமீபத்தில் கூட இவர் பாலியல் தொழில் செய்ததாக போலீசாரால் கைது செய்ப்பட்டார்.

இதையும் பாருங்க : கொழுக் முழுக்னு இருந்த மஹாலக்ஷ்மியா இது – என்ன இப்படி ஸ்லிம் ஆகிட்டாங்க.

Advertisement

ஆனால், அது தவறான செய்தி என்று வீடியோ வெளியிட்டார் சூர்யா. ரௌடி பேபி சூர்யா, டிக் டாக் மட்டுமல்லாமல் பல குறும்படங்களில் கூட நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் மாஸ்டர் படத்தினை விமர்சனம் செய்து இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், நானும் மீடியாவில் இருப்பதால் மாஸ்டர் படத்தில் இருக்கும் ஒரு குறையை பற்றி சொல்கிறேன். படத்தின் கிளைமாக்ஸ்ஸில் விஜய் சேதுபதியை, விஜய் ஒரு கொக்கியில் தொங்கவிட்டவுடன் அவரது உயிர் பிரிந்துவிடுவது போல காண்பித்து இருக்கிறார்கள்.

அப்படி உடனே விஜய் சேதுபதி உயிர் போகாமல், அவர் விரலை மடித்து அவர் எப்போதும் சொல்லுவது போல உனக்கு 2 நிமிஷம் டைம் தரேன் என்ற வசனத்தை பேசி இருக்கலாம். அதற்கு விஜய், ஏண்டா இன்னுமா இந்த டைலாக்க பேசுற என்று தன்னுடைய காப்பை ஏத்தி விட்டு ஓங்கி நெஞ்ச பாத்து குத்தி இருந்தார்னா செம மாஸா இருந்திருக்கும். 100 கோடி சம்பாதிச்ச இடத்துல 200 கோடி சம்பாதிச்சு இருக்கலாம். அந்த ஒரு சிறு மிஸ்டேக் மட்டும் தான் என்று கூறிய சூர்யா, டைரக்ட்டர் லோகநாதன் தானப்பா என்று பின்னால் திரும்பி யாரிடமோ கேட்டு பின்னர் லோகேஷ் கனகராஜ் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு. அது ஒன்னு தான் குறை அண்ணா என்று லோகேஷ் கனகராஜ்ஜிற்கு டிப்ஸ் கொடுத்துளளார்.

Advertisement
Advertisement