குவியும் பட வாய்ப்புகள் மற்றொரு காரை வாங்கியுள்ள ஜி பி முத்து - அதுவும் இப்படி ஒரு சொகுசு கார்.

By Rajkumar · 2/9/2021

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.

இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார். அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர். அது ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது வருகிறது. இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

இதையும் பாருங்க : சினிமா வாய்ப்புகள் வந்தும் தவறவிட்டுள்ள ஹிமா - பரவாயில்ல நல்ல முடிவு தான்.

இவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜி பி முத்து Second hand கார் ஒன்றை வாங்கி இருந்தார். இதுகுறித்து பேசிய அவர் 'என் பரம்பரையிலேயே முதல் கார் இது தான் என்று கண்ணீருடன் தெரிவித்து இருந்தார். ஜி பி முத்து முதல் கார் வாங்கியதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் .

இப்படி நிலையில் தற்போது இவர் BMW காரை வாங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் வியந்து போய்யுள்ளனர். ஜி பி முத்து தற்போது பல்வேரு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் சன்னி லியோன் நடிக்கும் புதிய தமிழ் படம் ஒன்றில் கூட ஜி பி முத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full