சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக் டாக் செயலி தான். ஆண், பெண், மூத்தவர்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்த டிக் டாக் மிகவும் பிரபலம் தான். தற்போது சமூக வலைத்தளங்களில் டிக்டாக் செயலி தான் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது என்று சொல்லலாம். பலரும் தங்களுடைய நடிப்பு நடன திறமைகளை எல்லாம் டிக் டாக் செயலி தான் வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த செயலியை சீனா தான் முதன் முதலாக ஆரம்பித்தது. ஆனால், உலகம் முழுவதும் 84 கோடி மக்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்துஇருந்தனர். தினசரி இந்த செயலியை 4 கோடிக்கும் மேல் மக்கள் பயன்படுத்தியும் வந்தனர். இந்த டிக் டாக்கில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாகி வந்தனர்.

Advertisement

டிக் டாக் மூலமாகவே பலர் பிரபலமாகி சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். ஆனால், இந்த செயலி பாதுகாப்பு இல்லை என்று இந்திய அரசு சமீபத்தில் தடை செய்தது. தமிழ் நாட்டில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த புல்லட் சிறுவனும் ஒருவர்.

விஜய்யின் தீவிர ரசிகரான இந்த சிறுவர் அடிக்கடி டிக் டாககில் விஜய் குறித்து பேசி பல்வேறு விடீயோக்களை பதிவிட்டு இருக்கிறார். டிக் டாக் தடை செய்யபட்டதால் பல டிக் டாக் பயனர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று விட்டனர். அந்த வகையில் இவரும் இன்ஸ்டாகிராமிற்கு சென்று ஆளே மாறிவிட்டார்.

Advertisement
Advertisement