டிக் டாக் இலக்கியா விவகாரம் : சண்டைப் பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் கொடுத்த விளக்கம், நடந்தது என்ன?

By subhashini · 26/7/2025

டிக் டாக் பிரபலம் இலக்கியா தற்கொலை முயற்சி செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக சமூக வலைத்தளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி, இன்ஸ்டா மற்றும் டப்ஸ்மாஷ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும், ஆண்கள் விதவிதமாக வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும், அந்த வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. அந்த அற்ப லைகஸ்க்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோ பதிவு செய்து வருகின்றனர். அப்படி கவர்ச்சியான வீடியோக்கள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா. இவர் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து எல்லை மீறிய தாறுமாறான கிளாமர் காட்டி இளம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்.

டிக் டாக் இலக்கியா:

பின், டிக் டாக் செயலியை தடை செய்த பிறகு, தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயல்களில் தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் டிக் டாக் மூலம் பிரபலம் ஆனவர் இலக்கியா. இவர் சோசியல் மீடியா பிரபலத்தினால் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். ஆனால், சினிமா இவருக்கு கை கொடுக்கவில்லை. அதனால் இவர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோக்களை போட்டு சம்பாதித்து வருகிறார்.

இலக்கியா தற்கொலை முயற்சி:

இப்படி இருக்கும் நிலையில் டிக் டாக் பிரபலம் இலக்கியா தற்கொலைக்கு முயற்சித்து இருக்கும் தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் இலக்கியர். இவர் உடற்பயிற்சிக்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்து கொள்கிறார். சம்பவம் நடந்த அன்று இவர் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து இருப்பதாக கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=HwLDw1esYQc

இலக்கியா பதிவு:

பின் இவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து இருக்கிறார். தற்போது இவர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். மேலும், இவர் இந்த தற்கொலை முயற்சி காரணம் திரைப்பட சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தான் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இலக்கியா, எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தான் என்று கூறி இருந்தார். பின் அந்த பதிவு போட்ட கொஞ்ச நேரத்திலேயே நீக்கியும் இருக்கிறார்.

திலீப் சுப்ராயன் பேட்டி:

பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் திலீப் சுப்பராயன், என்னுடைய பெயரை குறிப்பிட்டு இலக்கியா பகிர்ந்த தகவல் பொய்யானது. அவர் போட்ட பதிவை அவரே நீக்கி இருக்கிறார். இதன் மூலம் இது பொய்யான செய்தி என்பது தெளிவாகிறது. அவர் சொன்ன குற்றச்சாட்டால் நானும் என்னுடைய குடும்பத்தாருமே நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் இலக்கியா தற்கொலை முயற்சித்தது உண்மையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இருந்தாலுமே இலக்கியா தரப்பிலிருந்து எந்த புகார் கொடுக்காததால் காவல்துறையினர் விசாரணையை கைவிட்டதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full