ஒரே அடியாக 10க்கும் மேற்பட்ட சீரியல்களின் நேரத்தை மாற்றிய ஜீ தமிழ் - இதோ விவரம்

By krithika · 17/1/2025

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 சீரியல்களின் நேரம் மாற்றி இருக்கும் செய்திதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்குநிகழிச்சிகள் வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி , விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் திகழ்கிறது. எப்போதும் இந்த மூன்று சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

ஜீ தமிழ் சீரியல்கள்:

அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. மேலும், அனைத்து சேனல்களிலும் கடந்த 2024 ஆம் ஆண்டோடு பல சீரியல்களை முடித்ததோடு இந்த 2025 வருடத்தில் ஏகப்பட்ட புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட சீரியல்களின் நேரத்தை மற்றிருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

நேரம் மாற்றம்:

தற்போது எந்தெந்த சீரியல்களுக்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது. எந்தெந்த சீரியல்களுக்கு நேரம் மாற்றப்படவில்லை என்பதை விரிவாக பார்ப்போம். அந்த வகையில், 'மனசெல்லாம்' சீரியல் பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 'நானே வருவேன்' சீரியல் பிற்பகல் 3:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு மாரி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. பின், 'வள்ளியின் வேலன்' மாலை 6:30 மணிக்கு, ' வீரா' தொடர் மாலை 7: 00 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளார்கள்.

ஒரு மணி நேரம் சீரியல் :

மேலும், 'கெட்டி மேளம்' சீரியல் இரவு 7:30- எட்டு முப்பது மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் மட்டும் சுமார் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பின் 'நெஞ்சத்தை கிள்ளாதே' இரவு 10 மணிக்கும், 'நினைத்தாலே இனிக்கும்' இரவு 10.30 மணிக்கும், 'லட்சுமி கல்யாணம்' சீரியல் 11:00 மணிக்கும், கடைசியாக 'நீ பாதி நான் பாதி' இரவு 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம் மாற்றப்படாத சீரியல்கள்:

ஆனால், ஒரு சில சீரியல்களின் நேரத்தை மாற்றப்படவில்லை என தெரிகிறது‌. அது என்னென்ன சீரியல்கள் என்பதை தற்போது விவரமாக பார்ப்போம். 'மௌனம் பேசியதே' பிற்பகல் 1:00 மணிக்கும், 'இதயம்' சீரியல் பிற்பகல் 2.30 மணிக்கும், 'அண்ணா' தொடர் இரவு 8:30 க்கும், 'கார்த்திகை தீபம்' இரவு 9: 00 மணிக்கும், 'சந்தியா ராகம்' இரவு 9:30 மணிக்கும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

behindtalkies AMP · Quick view
View full