உங்களால தயாரிப்பாளர் தாணு கம்பெனிய மூடுற நிலைமைக்கு வந்துட்டார் - திருப்பூர் சுப்பிரமணியம் ஆவேசம்
வெற்றிமாறனை திருப்பூர் சுப்ரமணியன் வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. பெரும்பாலும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை, விடுதலை 2 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
இந்த படத்தை குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து வெற்றிமாறன் அவர்கள் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் எடுக்கிறது.
இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. ஆனால், இந்த படத்திற்கான வேலைகள் இன்னும் தொடங்கவில்லை. இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வெற்றிமாறன் குறித்த தகவல்:
மேலும், சமீபத்தில் வெற்றிமாறன் படம் தயாரிக்க போவது இல்லை என்று அறிவித்து இருந்தது பலருக்கும் வருத்தமாக இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், வெற்றிமாறன் இனி நான் படத்தை தயாரிக்கப் போவதில்லை என்று சொன்னது எங்களுக்கும் வருத்தமாக தான் இருக்கிறது. நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர். அதே சமயம் அவர் வாடிவாசல் என்ற ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.
திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி:
அந்த படத்தை என்னுடைய நண்பர் தாணு இயக்குகிறார். பல வருடமாக தாணுவும் நானும் நல்ல நண்பர்கள். அந்த படத்திற்காக தாணு, இயக்குனருக்கு ஃபுல் செட்டில்மெண்ட் பணத்தை கொடுத்திருக்கிறார், சூர்யாவிற்குமே ஒரு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து இருக்கிறார். 5 வருஷம் ஆகியுமே அந்த படம் எந்த ஸ்டேஜ்ல இருக்குன்னு எனக்கு தெரியல. இந்த படத்துக்காக ரொம்ப செலவு பண்ணி இருக்கேன்னு தயாரிப்பாளர் ரொம்பவே புலம்புகிறார். இப்படி ஒரு தயாரிப்பாளரை புலம்ப வைப்பது எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கட்டுப்படியாகவில்லை என்று மூடி வீட்டிர்கள். இப்ப உங்களால ஒரு தயாரிப்பாளர் கம்பெனியை மூடுகிறேன் என்று சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=xUVXMbeUxjQ
வெற்றிமாறன் பற்றி சொன்னது:
அதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். நீங்க உடனடியாக சூர்யாவை அழைத்து வந்து தானுவை சந்தித்து, என்ன பிரச்சனை எதனால் தள்ளிப்போகுது என்று சொல்லணும். இல்லை உங்களுக்கும் சூர்யாவிற்கும் செட் ஆகவில்லை, கதை செட்டாகவில்லை என்று சொன்னால் அதற்கு என்ன நஷ்ட ஈடு தயாரிப்பாளருக்கு கொடுத்து விடனும். எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள். உங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தை பற்றி மட்டும் நினைத்து மேடையில் எல்லாம் பேசினீர்கள். அப்ப தானுவும் தான் மேடை ஏறி அவருடைய வேதனையை சொல்லணும். இந்த மாதிரி இயக்குனர்கள் பண்ணுவதால் தான் நிறைய தயாரிப்பாளர்கள் பாதிக்கிறார்கள். நான் வெற்றிமாறனை மட்டும் சொல்லவில்லை பல இயக்குனர்கள் இப்படி தான் செய்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிமாறன் தயவுசெய்து இந்த வாடி வால் பிரச்சனையை முடியுங்க. இதுதான் என்னுடைய வேண்டுகோளாகவே வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.