நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

அவ்வளவு ஏன்பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதையும் பாருங்க : 19 ஆண்டுக்கு முன் முதன் முதலாக அட்டை படத்தில் இடம் பெற்ற அர்ச்சனா – அந்த அர்ச்சனாவ எல்லாருக்கும் புடிக்கும்பா.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு 100 சதவீத வாக்கு பதிவை மக்களிடத்தில் ஊக்கப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வலி ‘மை’ என்று அஜித் படத்தின் தலைப்பை பயன்படுத்தி, ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது என்று விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

Advertisement

Advertisement
Advertisement