தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 6) தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவு பெரும். வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதே போல பல்வேறு பிரபலங்களும் காலையிலேயே சென்று வாக்களித்து வருகின்றனர். ரஜனி, அஜித், ஷாலினி, ஸ்டாலின், உதயநிதி போன்ற பலர் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வந்தனர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய், வாக்கு செலுத்துவதற்காக சைக்கிளில் சென்றுள்ளது பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. நடிகர் விஜய் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் 7 வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்துவதர்க்காக தனது வீட்டில் இருந்து சைக்கிளில் சென்றுள்ளார். வீட்டில் இருந்து ஒரு 500 மீட்டர் தொலைவில் தான் அந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது. விஜய் ஏன் சைக்கிளில சென்று வாக்களித்துள்ள இந்த விஷயம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளானது.

இப்படி ஒரு நிலையில் விஜய் ஏன் சைக்கிளில் சென்று வாக்கு செலுத்தினார் என்பதற்கு விஜய்யின் pro விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நடிகர் விஜய்யின் வீடு வாக்குச் சாவடிக்கு மிகவும் அருகில் இருந்ததால் தான் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார். அதே போல விஜய் ஒட்டி வந்த சைக்கிளின் விலை என்ன தெரியுமா ? வரியுடன் சேர்த்து 25,000 மேல் வருமாம்.

Advertisement
Advertisement