பெண்களை இழிவாக பேசியதற்காக நடிகர் ராதாரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பல வாரங்களாக பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒரு சில அரசியல் வாதிகளின் பிரச்சார பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் நடிகர் ராதாரவி கமல், நயன்தாரா, உதயநிதி போன்றவர்களை பற்று கடுமையாக பேசி இருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த விழாவில் பேசிய ராதாரவி, நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க.அப்போலாம் கடவுளாக நடிங்க கே.ஆர்.விஜயா போன்றவர்களை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேணும்னாலும் நடிக்கலாம்.

Advertisement

பார்த்தவுடனே கும்பிடறவங்களையும் போடலாமா, பார்த்தஉடனே கூப்பிடுறவங்களையும் போடலாம்” என ராதாரவி பேசினார். இது பலராலும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதையடுத்து நடிகர் ராதாரவி திமுக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.தற்போது பா ஜ கவில் இருக்கும் ராதாரவி, வருகிற சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பா ஜ க சார்பாக போட்டியிடும் குஷிபூவை ஆதரித்து பேசி இருந்தார். அப்போது, தான் திமுகவில் இருந்த போது நயன்தாராவை பற்றி பேசியதால் என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

நயன்தாரா யாரு டா உன் கட்சி கொள்கை பரப்பு செயலாளரா ? என்ன உறவு உனக்கு. சரி, உதயநிதிக்கு நயன்தாராவுக்கு உறவுன்னா அதுக்கு நான் என்ன செய்றது என்று பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தேர்தல் அதிகாரி சிவசுப்ரமணியன் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்துதல் (509 IPC) என்ற பிரிவில் ரேஸ்கோர்ஸ் போலீசார் ராதாரவி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Advertisement