கன்னியாகுமரி தொகுதியில் வென்றுள்ள விஜய் வசந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து நிலையில் தன் மீது வைக்கப்பட்ட முதல் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார் விஜய் வசந்த்.நடந்து முடிந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மறைந்த  நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமாரின் மகனும் நடிகருமான வசந்தகுமார் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பட்டதால் சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த  போட்டியிட்டார். இதே தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இப்படி ஒரு நிலையில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட 1,21,762 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் விஜய் வசந்த்.

இதையும் பாருங்க : படு ஸ்லிம் உடல், தொடை தெரியும் அளவு குட்டை உடை – மடோனாவா இது ? வேற லெவல் Transformation

Advertisement

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன். கடந்த 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மறைந்த வசந்தகுமார் 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார்.

இப்படி ஒரு நிலையில் வசந்த குமாருக்கு பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வர, ட்விட்டர் வாசி ஒருவர், அடுத்த எலக்சன்லயும் வின் பண்ணனும் நினைச்சிங்கனா தொகுதி பக்கம் அப்பப்ப தலைய காட்டுங்க ப்ரோ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த விஜய் வசந்த், அப்பப்ப இல்ல ப்ரோ எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன். இது அடுத்த எலக்சன்ல வெற்றி பெறுவதற்காக அல்ல. இந்த எலக்சன்ல நீங்க என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement
Advertisement