எங்களண்ணன் எடப்பாடியார், தி மு க வேண்டாம் போடா - ஆ ராசா, முதலமைச்சர் விவகாரம் குறித்து கௌதமி போட்ட பதிவு.
வருகிற சட்ட மன்ற தேர்தலில் திமுக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தமிழக முதல்வர் குறித்து ஆ. ராசா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எடப்பாடியை பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்தும், முதலைச்சர் எடப்பாடி பழனிசாமியை இழிவாக பேசினார்.
https://twitter.com/balajidtweets/status/1375326767087546369
ஆ ராசாவின் இந்த பேச்சை அதிமுக மற்றும் பா ஜ க கட்சியை சேர்ந்த பலர் கண்டித்தனர்.அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த அ ராசா, எடப்பாடி குறித்தோ அவரது அன்னை குறித்தோ நான் தவறாகப் பேசவில்லை.ஆனாலும், முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டுக் கண்கலங்கினார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து மனதின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இப்படி ஒரு நிலையில் நடிகையும் பா ஜ கவில் சமீபத்தில் இணைந்த நடிகை கௌதமி இந்த விவாகரத்தில் எடப்பாடிக்கு ஆறுதல் தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், அண்ணன் எடப்பாடி பழனிசாமி , தங்களின் காலம் சென்ற தாயார் தவசாயி அம்மாள் அவர்களை, திமுகவின் மூத்த தலைவர் இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. தரக்குறைவான புண்படுத்தும் அவரின் பேச்சு அதிர்ச்சியையும் கோபத்தையும் அளிக்கிறது.
https://www.youtube.com/watch?v=jY2coqw6lAY
ஒரு மகனாக நீங்கள் உணரும் வலியினை, உங்கள் உடன் பிறவா சகோதரிகளாக நாங்களும் உணர்கிறோம். ஒரு நியாயமான சமூகத்தின் அடிப்படை அம்சமே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், குரலற்றவர்களுக்கும் மதிப்பையும் சமூக பாதுகாப்பையும் அளிப்பதே.நம் வீடுகளில் பொக்கிஷங்களாக மதிக்கப்படும் தாய்மார்களையும், சகோதரிகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசிவரும் திமுக தலைவர்களால் எப்படி அனைவருக்கும் பாதுகாப்பான நியாயமான நல்லாட்சியை வழங்க முடியும்?
https://twitter.com/gautamitads/status/1376758030864289793
எந்தவிதமான சமூக பாதுகாப்பு உறுதியைக் கொடுத்துவிட முடியும்? பெண்களை இழிவுபடுத்துவோர்க்கு அரசியலில் ஒருபோதும் இடம் கிடையாது என்பதை தாய்மார்கள், அக்கா, தங்கைகள், பெண்கள் ஆகியோர்களை மதிக்கும் ஒவ்வொருவரும் நிரூபித்து காண்பிப்பர். இப்படிப்பட்டவர்களை பொறுப்பான பதவிகளுக்கு வரவிடாமல் தடுப்பது நம் சமூக கடமையும் கூட.என்று பதிவிட்டு, இறுதியாக எங்களண்ணன்எடப்பாடியார் #திமுகவேணாம்_போடா #WeAreWithYouEPS #RejectDMK #SayNoToDMK போன்ற ஹேஸ் டேக்குகளை பதிவிட்டுள்ளார் கௌதமி.