தேர்தல் பிரச்சாரங்களில் பார்த்து பேச வேண்டும், இல்லை என்றால் ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது திமுக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தமிழக முதல்வர் குறித்து ஆ. ராசா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எடப்பாடியை பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்தும், முதலைச்சர் எடப்பாடி பழனிசாமியை இழிவாக பேசினார். முறைப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின். நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் எடப்பாடி.குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டெல்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார் என்று பேசி இருந்தார். ஆ ராசாவின் இந்த பேச்சை அதிமுக மற்றும் பா ஜ க கட்சியை சேர்ந்த பலர் கண்டித்தனர்.

Advertisement

அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த அ ராசா, எடப்பாடி குறித்தோ அவரது அன்னை குறித்தோ நான் தவறாகப் பேசவில்லை. நானும் ஒரு தாயின் 8-வது குழந்தை என்கிற முறையில் அப்படித் தவறாகப் பேசவில்லை என்று தெரிவித்தேன்.ஆனாலும், முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டுக் கண்கலங்கினார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து மனதின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் ஆ. ராசா மன்னிப்பு கேட்டது பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், ஆ. ராசா எதற்கு தேவை இல்லாமல் இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டி எடப்பாடியிடம் மன்னிப்பு கோரினார்? அது தேவையே இல்லை. அவர் என்ன பேசினார் என்று அவருக்குத் தெரியாதா? வழக்கு வந்தால் நீதிமன்றத்தில் சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்கலாமே!இரண்டு நாட்களாக எல்லா இடங்களிலும் இந்தச் செய்தி பேசப்பட்டவுடன் அது என்னதான் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆ. ராசா பேசியதைக் கேட்டேன்.

Advertisement

“அதிமுக என்கிற தாய்க்கும் பிஜேபி என்கிற தந்தைக்கும் பிறந்த முதல்வர் பதவி” என்கிற உருவக அணிதானே அந்தப் பேச்சு? Its just a figurative speech like we all speak on various things in everyday life.எடப்பாடியின் தமிழ் அறிவு தமிழ்நாடு ஏற்கனவே அறிந்ததுதானே. கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார், அபிராமி லிங்கன், பாப்பு.. பாப்பு என்பவை எல்லாம் தெரிந்ததே.

Advertisement

இந்த உருவக அணிப்பேச்சை அவர் கேட்டு தவறாக விளங்கிக்கொண்டாரா, அல்லது மற்ற தமிழ் ஞானசூன்யங்கள் கேட்டுப் போய் சொன்னதுகளோ, அல்லது தெரிந்தே விஷமப் பிரச்சாரமா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இவற்றில் ஒன்றுதான்! இதற்குப் போய் ஏன் மன்னிப்புக் கேட்டு இதை தவறு போல ஆக்கினார் ஆ. ராசா?என்ன நடந்ததென்றே தெரியாத பெரும்பான்மை மக்கள் இந்த மன்னிப்பைப் பார்த்து ‘இவர் ஏதோ தப்பாகத்தான் பேசியிருக்கிறார், இல்லாமல் மன்னிப்பு கேட்பாரா’ என்று சொல்வதற்கு இடமாகி விட்டது.

Advertisement