BJPக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பதிவிட்டதால் கேள்வி கேட்ட BJP ஆதரவாளர். போடா சு*** பங்கம் செய்த காஜல்

By Rajkumar · 30/3/2021

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் பசுபதி அடிக்கடி பல்வேறு சமூக பிரச்சனை குறித்தும் ஜாதி ஒழிப்பு குறித்தும் பதிவிட்டு வருகிறார். அதே போல பெரியார் கொள்கைகளை கடைபிடித்து வரும் காஜல், பா ஜ கவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தைரியமாக தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் வலுத்த போது இவர் இந்தி எதிர்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இப்படி ஒரு நிலையில் வருகிற சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் தமிழகத்தில் எப்படியாவது வெற்றிபெற பா ஜ க வேண்டும் என்று அந்த கட்சி சார்பாக பல சினிமா பிரபலங்கள் கூட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஜல் பசுபதி தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 'no vote to BJP' என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்த முகநூல்வாசி ஒருவர், இதற்கு பதில் அளித்த காஜல் பேட்ட பட ரஜினி ஸ்டில்லை போட்டு அப்படியே ஓடி போய்டு என்று பதில் அளித்துள்ளார். மேலும், அந்த நபர் பிஜேபி ஆதரவாளர் என்பதையும் அவர் பி ஜே பி வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று போட்ட பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்ட காஜல், பாரத் மாத்தாகி ஜாய். வெளிய போடா #Gobackmodi #Veleyapodasangi என்று பங்கம் செய்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full