மதுபாட்டிலை முன்னே வைத்துக்கொண்டு யோசித்த வரலக்ஷ்மி ! வைரலாகும் புகைப்படம்

By Ajju · 27/12/2017
நடிகர்கள் சரக்கு மற்றும் தம் அடிக்கும் போது நாம் ஏன் அடிக்க கூடாது என நடிகைகளும் பொதுவெளியில் கிளம்பிட்டால் என்ன ஆவது? அப்படி ஒரு குழப்பத்தில் தான் உள்ளார் நடிகை வரலட்சுமி. விமல் ஹீரோவாக வரலட்சுமி ஹீரோயினாக நடிக்கும் படம் 'காதல் மன்னன்'. இந்த படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கமான விமல் படங்களை போல கிராமத்து அட்ராசிட்டீஸ் அடங்கிய இந்த படம் குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள எழில்கொஞ்சும் பசுமையான இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வரலட்சுமி ஒரு போலீஸ் அதிகாரியின் மகளாக நடிக்கிறார். அந்த போலீஸ் அதிகாரியாக சந்திர மௌகி நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு சீனில் விமலும் வரலட்சுமியும் மணக் கோலத்தில் இருக்க வரலட்சுமிக்கு என்ன நியாபகம் வந்ததோ தெரியவில்லை. தீடீரென சரக்கு அடிக்க டாஸ்மாக்கில் நுழைந்து ஒரு பாட்டில் பீரை வாங்கி டேபிளில் உட்கார்ந்து விடுகிறார். இந்த சீனை இயக்குனர் இயக்கும் போது ஒரு போட்டோவை எடுத்து வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், வரலட்சுமி சரக்கு அடிக்கலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது.
behindtalkies AMP · Quick view
View full