டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள சமந்தா மற்றும் சோபிதா, யாரு முன்னாடி இருக்காங்கன்னு தெரியுமா?

By krithika · 9/12/2024

இந்த வருடத்தின் டாப் 10 இந்திய ஸ்டார்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. அதனால் இந்த ஆண்டின் டாப் லிஸ்ட் பட்டியல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பல சுவாரசியமான விஷயங்களை திரைத்துறை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சிறிய பட்ஜெட் படங்கள் ஹிட் அடித்ததையும், பெரிய பட்ஜெட் படங்கள் சொதப்பியதும் நம்மால் பார்க்க முடிந்தது.

அதேபோல், இந்த ஆண்டில் திரைத் துறையினரின் பர்சனல் வாழ்க்கையும் சோசியல் மீடியாவில் விமர்சனங்களுக்கு உண்டானது. பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த பல பிரபலங்கள் இந்த ஆண்டில் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோர் இந்த ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது இந்த ஆண்டின் டாப் 10 நடிகர்களின் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது.

டாப் 10 நடிகர்கள்:

அதில், இந்த ஆண்டு ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அனிமல் படத்தில் நடித்த த்ரிப்தி டிம்ரி முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் இதுவரை பாலிவுடில் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ள நிலையில், 'அனிமல்' படம் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பட்டியலில் தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

தீபிகா இரண்டாவது இடம்:

பாலிவுடில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தீபிகா படுகோன். இவர் தன்னுடன் படங்களில் நடித்த ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஆண்டு தீபிகா படுகோனின் நடிப்பில் கல்கி, ஃபைட்டர், சிங்கம் அகைன் என்ன மூன்று படங்கள் வெளியாகி இருந்தது. இந்த மூன்று படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது.

ஷாருக்கான் நான்காவது இடம்:

அதைத்தொடர்ந்து, இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாலிவுட் நடிகர் இஷான் கட்டார் இடம் பிடித்துள்ளார். அதற்கு அடுத்து நான்காவது இடத்தில் ஷாருக்கான் இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஷாருக்கான் நான்காவது இடத்தில் உள்ளது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா துலிபாலா இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவை பின்னுக்கு தள்ளிய சோபிதா:

பின், ஆறாவது இடத்தில் நடிகை ஷர்வாரி, ஏழாவது இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், எட்டாவது இடத்தில் சமந்தா, ஒன்பதாவது இடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், கடைசியாக பத்தாவது இடத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் இடம்பெற்றுள்ளார். மேலும், இந்த பட்டியலில் ஒரு தமிழ் நடிகர் கூட இடம்பெறவில்லை என்பது தமிழ் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சமந்தா எட்டாவது இடத்தில் உள்ள நிலையில் சோபிதா அவரைப் பின்னுக்கு தள்ளிவிட்டு ஐந்தாவது இடத்தில் உள்ளது இணையத்தில் பேசும் பொருள் ஆகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full