டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், இந்த வாரம் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா?

By Rajkumar · 12/7/2024

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தை பெற்றிருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு டிவி ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

சீரியல் டிஆர்பி:

அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் இரண்டாம் வாரத்தில் முதல் இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் சன் டிவி சீரியல் முதல் இடத்தை பிடித்து விடுகிறது. எப்பவாவது தான் விஜய் டிவி வரும். இப்படி இருக்கும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை முந்திக்கொண்டு விஜய் டிவி முதலிடத்தை சீரியல் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை:

'சிறகடிக்க ஆசை' சீரியல் 8.38 புள்ளிகளை பெற்று டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் சிறகடிக்க ஆசை ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. தற்போது இந்த சீரியல் முதல் இடத்தை பிடித்து இருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சிங்கப்பெண்ணே சீரியல்:

அதேபோல் எப்போதுமே டிஆர்பியில் முன்னிலையில் இருந்த சன் டிவியின் 'சிங்கப் பெண்ணே' சீரியல் தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 8.27 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

கயல்:

எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களாகவே முதல் இடத்தை பிடித்த ‘கயல்’ சீரியல் இந்த வாரம் 8.03 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல்.

மருமகள் சீரியல்:

இந்த சீரியல் சமீபத்தில் தான் சன் டிவியில் ஒளிபரப்பட்டது. இந்த சீரியல் 7.89 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியலில் கேபி மற்றும் 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகர் ராகுல் ரவி நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து நன்றாக சென்று கொண்டு இருக்கிறது.

வானத்தைப்போல:

கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த ‘வானத்தைப் போல’ சீரியல் 7.50 புள்ளிகளுடன் இந்த வாரம் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாச கதை. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியல் 7.12 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது சீரியலில் ராதிகா சொன்ன பொய்யால் ஈஸ்வரி ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் எடுக்க பாக்கியா போராடுகிறார்.

மல்லி:

சன் டிவியில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் 'மல்லி'. இந்த சீரியல் 6.80 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் 6.77 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

சுந்தரி 2 சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் 'சுந்தரி'. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நன்றாக செல்கிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் 'தெய்வமகள் சீரியல்' நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த தொடர் 6.49 புள்ளிகளை பெற்று ஒன்பதாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

சின்ன மருமகள்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியல் 5.72 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடரும் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full