இந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்டட தமிழ் ட்ரைலர்கள். அஜித், சூர்யாவை பின்னுக்கு தள்ளிய ஓவியா.

By Rajkumar · 27/12/2019

சினிமா உலகில் உருவாகும் படங்கள் எல்லாம் திரையரங்கிற்கு வருவதற்கு முன்னர் ட்ரெய்லர் மூலம் படத்தின் ஒரு சில காட்சிகளை காண்பிப்பார்கள். இது காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் வழக்கமான ஒன்று. சோசியல் மீடியா என்ற சமுக வலைத்தளம் எப்போது உருவானதோ அதிலிருந்து படங்களின் டிரெய்லர், புரோமோஷன் போன்ற சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில் இந்த வருடம் பல முன்னணி நடிகர்களின் படத்தின் டிரெய்லர் அதிக அளவு பார்வையிட்டும், லைக் செய்தும், ஷேர் செய்தும் வந்து உள்ளார்கள் ரசிகர்கள். ஒரு படம் மிகப் பெரிய அளவு வெற்றி அடைவதற்கு அந்த படத்தின் டிரைலர் தான் மிக அவசியமான ஒன்று.

முதல் இடம்

அப்படி இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களின் ட்ரெய்லர்களில் அதிக யூடியூப் வியூஸ் கொடுத்த படங்களின் பட்டியல் வந்து உள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் எந்த படத்தின் ட்ரைலர் டாப் 10க்குள் உள்ளது என்பதை பார்க்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தளபதி விஜய் படத்தின் டிரைலர் தான் யூடியூபில் மாஸ் காட்டி உள்ளது. இந்த வருடம் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான "பிகில்" திரைப்படத்தின் டிரைலர் தான் அதிக அளவில் பார்வையிடப்பட்டு உள்ளது. இதுவரை 4.8 கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்து உள்ளார்கள். மேலும், 23 லட்சம் பேர் இந்த டிரெய்லரை லைக் செய்து உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்திய திரைப்பட ட்ரெய்லரலில் அதிக லைக்ஸ் செய்யப்பட்ட படமும் நம்ம தளபதி விஜயின் பிகில் படத்தின் டிரைலர் தான். இரண்டாவது இடத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த "விஸ்வாசம்" படத்தின் டிரெய்லர் தான். இதனால் அஜித் ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் டிரெய்லரை 3.2 கோடி பார்வையாளர்கள் பார்வையிட்டு உள்ளார்கள். இந்த படத்தின் டிரெய்லரை 13 லட்சம் ரசிகர்கள் லைக் செய்து உள்ளார்கள். மூன்றாவது இடத்தில் ரஜினி படம் இருக்கும் என்று நிறைய பேர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், மிகப் பெரிய மாற்றம் அது ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் படம் தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. ராகவா லாரன்சின் "காஞ்சனா 3" திரைப்படத்தின் ட்ரெய்லர்-2.8 கோடி பார்வையாளர்களைப் பார்க்க வைத்து உள்ளது.

இரண்டாவது இடம்

ரஜினியின் "பேட்ட" திரைப்படம் 2.6 கோடி பார்வையாளர்கள் பார்த்து உள்ளார்கள். மேலும், பேட்ட படம் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் இதுவரை ஒரு கோடி பேருக்கு மேல் பார்வையிட்டுள்ளனர். ஆனால், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியிடுவதால் இந்த படத்தின் டிரைலரை அடுத்த ஆண்டு கணக்கில் தான் வைப்பார்கள் என்றும் பேசப்படுகிறது. மேலும், ஐந்தாவது இடத்தில் ஓவியா நடிப்பில் வெளியான "90 ml" படத்தின் டிரைலர் 1.72 கோடி பார்வையாளர்களைப் பார்க்க வைத்துள்ளது. ஏன்னா, ஓவியா ஆர்மி கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் போது ஓவியாவின் படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் மீண்டும் அஜித் நடிப்பில் வந்த "நேர்கொண்டபார்வை" இடம் பிடித்து உள்ளது.

மூன்றாவது இடம்

இதை தொடர்ந்து 7வது இடத்தில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த "என் ஜி கே" படத்தின் டிரைலர் வந்துள்ளது. எட்டாவது இடத்தில் ஜெயம் ரவியின் "கோமாளி" படத்தின் டிரைலர் இடம் பெற்று உள்ளது. அடுத்த இரண்டு இடங்களை அதாவது ஒன்பதாவது, பத்தாவது இடங்களை தொடர்ந்து அப்பாவும் மகனும் பெற்று உள்ளார்கள் என்பது சுவாரசியமான விஷயம். அது வேற யாரும் இல்லைங்க ஒன்பதாவது இடத்தை விக்ரமின் "கடாரம் கொண்டான்" ட்ரைலர் பிடித்துள்ளது. 10வது இடத்தை விக்ரம் மகன் துருவின் ஆதித்யா வர்மா படம் பிடித்து உள்ளது. இந்தப் பட்டியல் வந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இதில் கொடுமை என்னவெனில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் சூர்யாவின் என் ஜி கே ட்ரைலரை ஓவியாவின் 90எம் எல் ட்ரைலர் முந்தியது தான் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full