குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கிய நிலையில் முன்னாள் நடுவரான வெங்கடேஷ் பத் சன் டிவியின் புதிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. இன்று 45வது திருமண நாளை கொண்டாடும்

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் என்று புது கோமாளிகள் இணைந்துள்ளனர்.இந்த சீசனில் ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர்.

அதே போல இந்த சீசனில் செப் தாமுவுடன் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி இருக்கிறார். இந்த சீசன் துவங்கும் முன்பே இந்த நிகழ்ச்சியில் இனி தான் பங்குபெற போவது இல்லை என்று வெங்கடேஷ் பட் அறிவித்து இருந்தார். விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் Media Masons 10 நிறுவனம் தான் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தயாரித்து வந்திருந்தது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக Media Masons தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பேசிய அவர் ‘ எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் அனைவரும் என்னை மிஸ் செய்வது நீங்கள் அனைவரும் எனக்காக அனுப்பிய மெசேஜ் இதையெல்லாம் பார்க்கும் போது நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.

Advertisement

கடவுள் என்னை ஆசீர்வதித்து இருக்கிறார் என்று தோன்றுகிறது மிகவும் நன்றி உங்களை என்றும் ஏமாற்ற மாட்டேன் என்றும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்.என்னுடைய வாழ்வின் துடிப்பே நீங்கள்தான் உங்களுக்காக ஏண்டில் இருந்து காலை 8 மணி சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது எட்டு மணி முதல் சன் டிவி பாருங்கள் உங்களுக்கு அது தெரிய வரும்’ என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற புதிய நிகழ்ச்சியை துவங்கி இருக்கின்றனர்மேலும், இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட்டின் VB Dace நிறுவனம் தான் தயாரிகிறது. வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக்கு வித் கோமாளி பிரபலன்களான KPY தீனா, சூப்பர் சிங்கர் பரத், GP முத்து, மோனிஷா ப்ளேசி, தீபா போன்ற பலரை களமிறக்கி இருக்கிறது.

Advertisement