படம் எடுத்துட்டு தான் கல்யாணம்ன்னு நினைச்சேன் - திருமணம் பற்றி மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த்
திருமணத்திற்கு பின் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்த படம் டூரிஸ்ட் பேமிலி.
இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே பாராட்டி இருந்தார்கள். இயக்குனருக்கு இதுதான் முதல் படம். இருந்தாலுமே மிகத் தெளிவாகவும் திறமையாகவும் எடுத்து இருந்தார். மேலும், இவர் இந்த படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் முக்கியமான ரோலிலும் நடித்திருந்தார்.
அபிஷன் ஜீவிந்த் குறித்த தகவல்:
தற்போது அபிஷன் ஜீவிந்த் அவர்கள் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தினை டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருந்த ஒருவர் தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு கரெக்ட் மச்சி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அபிஷனுக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க டூரிஸ்ட் பேமிலி படத்தினுடைய ப்ரமோஷன் நிகழ்ச்சி போது அபிஷன் தன்னுடைய தோழியிடம் அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார். இதை அடுத்து நேற்று இயக்குனர் அபிஷன் தன்னுடைய காதலி அகிலாவை கரம் பிடித்திருக்கிறார்.
அபிஷன் ஜீவிந்த் திருமணம்:
இவருடைய திருமணத்தில் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் எல்லோருமே கலந்து கொண்டிருந்தார்கள். திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அபிஷன் - அகிலா இருவருமே நன்றி தெரிவித்திருந்தார்கள். பின் பேசிய அபிஷன், நேற்று எனக்கு முக்கியமான நாள். எங்கிருந்தோ வந்த ஒரு பெயரை வளர்த்து விட்டது நீங்கள் எல்லோரும் தான். உங்கள் எல்லாருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. என்னிடம் அன்பாக நடந்து கொண்டிருக்கிறீர்கள். நான் எதை செய்தாலும் நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறீர்கள். எல்லோருக்கும் நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
https://youtu.be/JZD0g4cFXZA?si=-BONUbI23ls7a51o
அபிஷன் ஜீவிந்த் பேட்டி:
படம் எடுத்த பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். காரணம், எப்போது அகிலாவை நன்றாக பார்த்துக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அந்த இடத்தில் என் வாழ்க்கை மாறும் என்று நம்பியதால் தான் மேடையில் வைத்து திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டேன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே அவர்களை எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் பள்ளி நண்பர்கள் தான். படம் எடுப்பதை விட மாட்டேன். இடையில் வரும் வாய்ப்புகளிலும் நடிப்பேன். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதிலிருந்து சில நல்ல கதைகளை கேட்டு வைத்திருக்கிறேன். ஆனால், அடுத்து ஒரு படம் இயக்க இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.