ஹீரோவாக களமிறங்கும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் - வெளியான சுடச்சுட அப்டேட்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஹீரோவாக நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
டூரிஸ்ட் பேமிலி படம்:
இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற சசிகுமார் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படம் குறித்த தகவல்:
இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே பாராட்டி இருந்தார்கள்.
இயக்குனருக்கு இதுதான் முதல் படம். இருந்தாலுமே மிகத் தெளிவாகவும் திறமையாகவும் இந்த படத்தை எடுத்திருக்கிறார். மேலும், இவர் இந்த படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் முக்கியமான ரோலிலும் நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரொம்ப எமோஷனலாகவும் இருந்தது.
Tourist Family இயக்குனர் அபிஷன் ஹீரோவாகப் அறிமுகம் ஆகிறார் #touristfamily #AnaswaraRajan #CorrectedMachi #Abishan #DinakaranNews pic.twitter.com/btyy2FIwh6
— Dinakaran (@DinakaranNews) July 5, 2025
அபிஷன் குறித்த தகவல்:
குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையுமே அபிஷன் ஜீவிந்த் தன்னுடைய நடிப்பால் கலங்க வைத்து விட்டார். இதனாலே இவர் இயக்கத்தில் மட்டும் இல்லாமல் நடிப்பிலுமே திறமையாக இருக்கிறார் என்று பாராட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது அபிஷன் ஜீவிந்த் அவர்கள் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் குறித்து அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, அபிஷன் அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் படத்தினை டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருந்த ஒருவர் தான் இயக்க இருக்கிறார்.
ஹீரோவான அபிஷன்:
இந்த படத்திற்கு கரெக்ட் மச்சி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அபிஷனுக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் தன்னுடைய முதல் படமான கோமாளியில் கேமியோ ரோலில் நடித்த பிறகுதான் அடுத்த படத்தில் ஹீரோவாக நடித்து தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். அதே ரூட்டையே தற்போது அபிஷன் பாலோ செய்கிறார். பிரதிப்பை போல அபிஷனுக்கு இந்த சினிமா கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.