3 வாரங்களை கடந்தும் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மொத்த வசூல் இத்தன கோடியா - உற்சாகத்தில் படக்குழு

By subhashini · 24/5/2025

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய மட்டும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இரா. சரவணன் இயக்கி இருந்தார். இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள்.

டூரிஸ்ட் பேமிலி படம்:

இதைத்தொடர்ந்து சமீபத்தில் சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற சசிகுமார் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் டூரிஸ்ட் பேமிலி படத்தின் வசூல் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தின் வசூல்:

இந்த படம் வெளியாகி முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 1.6 கோடி வசூல் செய்தது. சசிகுமாரின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை டூரிஸ்ட் பேமிலி பெற்று இருக்கிறது. இந்த படம் சசிகுமாருக்கு ஒரு நல்ல பெயரையும் வாங்கி தந்திருக்கிறது என்றே சொல்லலாம். மேலும், இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே தற்போது வரை பாசிட்டிவான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே பாராட்டி இருக்கிறார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

மேலும், இந்த படம் இதுவரை வெளியாகி மூன்று வாரத்தை கடந்து இருக்கிறது. இருந்தாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இன்று வரையும் பல திரையரங்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மே 24ஆம் தேதி அன்று ஜப்பானில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் படக்குழு கூறி இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் 75 கோடி வசூல் செய்து இருக்கிறது. இதை படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை:

படத்தில் சசிகுமார் தன்னுடைய மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் இலங்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். இதனால் இவர்கள் இலங்கையில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக இந்தியா வருகிறார்கள். ராமேஸ்வரம் வந்த இவரை சிம்ரன் அண்ணன் யோகி பாபு தான் சென்னைக்கு அழைத்து வந்து கேசவ நகரில் குடி வைக்கிறார். இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளத்தையே மறைத்து சசிகுமார் குடும்பம் வாழ்கிறது. இன்னொரு பக்கம் ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸ் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் சசிகுமார் குடும்பம் சிக்குகிறது. இந்த சவால்களில் இருந்து சசிகுமார் தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? அதனால் என்னென்ன பிரச்சனை வருகிறது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

behindtalkies AMP · Quick view
View full