சேரன்-டொவினோ கூட்டணியில் வெளிவந்த 'நரிவேட்டை' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
மலையாள உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் டொவினோ தாமஸ். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நரிவேட்டை. இந்த படத்தில் சேரன், சூரஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், ப்ரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார், ஜிதின் ஈடன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியிருக்கிறார். இந்த படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் வெளியாகியிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஆரம்பத்திலேயே காட்டில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களுடைய இருப்பிட தேவைக்காக சின்ன சின்ன போராட்டங்கள் அரசாங்கத்திடம் செய்து வருகிறார்கள். அதே சமயம் படத்தினுடைய நாயகன் டொவினோ கையில் ஒரு பையுடன் தலைமறைவாக இருக்கிறார். இவரை போலீஸ் தேடுகிறது அங்கிருந்துதான் பிளாஷ்பேக்கை தொடங்குகிறார்கள். டொவினோ சென்ட்ரல் கவர்மெண்டில் உயர் அதிகாரியாக போக வேண்டும் ஆசை படுகிறார்.
அப்போது டொவினோவுக்கு வேலை இல்லாத காரணத்தை காட்டி காதலி உட்பட எல்லோருமே திட்டி அவரை கிண்டல் செய்கிறார்கள். இதனால் கிடைத்த கான்ஸ்டபிள் வேலைக்கு டொவினோ செல்கிறார். பிடிக்காத வேலை என்றாலுமே யூனிபார்ம் போட்டு தைரியமாக தன்னை ஒரு போலீசாக நினைத்து டொவினோ செல்கிறார். இதனை டொவினோ ஒருவரை அடிக்கிறார். பின் பெரிய உயர் அதிகாரி டொவினோவை கண்டிருக்கிறார்.
அதன் பின் டோவினாவுடன் சேர்ந்து பல போலீஸ்காரர்கள் மலைவாழ் மக்கள் நடத்தும் போராட்டத்தில் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் சின்ன போராட்டத்தை பெரிய போராட்டமாக நடத்த திட்டமிட்டார்கள். அந்த இடத்தில் தான் டொவினோ வாழ்க்கையே மாறுகிறது. இதனால் பல சம்பவம் நடக்கிறது. இறுதியில் போலீஸ் ஏன் டொவினோவை தேடுகிறது? மலைவாழ் மக்கள் ஊரில் என்ன நடந்தது? டொவினோ தன் கனவை வென்றாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.
படத்தில் ஹீரோ டொவினோ தன்னுடைய போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் கதாபாத்திரம் என்றாலே டொவினோவிற்கு அல்வா சாப்பிடுவது போல இந்த படத்திலும் மிரட்டி இருக்கிறார். அதிலும் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து செய்யும் போராட்டம் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவரை அடுத்து வரும் சேரன் உயரதிகாரியாக நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். இதுதான் இவருடைய முதல் மலையாள படம்.
இவரை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அரசாங்கம் சொல்வதை செய்வதுதான் ஒரு போலீஸ் அதிகாரி உடைய வேலை. பாசம், நேசம், எமோஷனல் எதற்கும் இடமில்லை என்பதை இந்த படத்தில் இயக்குனர் ஆழமாக கூறியிருக்கிறார். அதோடு சிஸ்டம் உடைய கொடூரத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். நீதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தையும் சிறப்பாக இயக்குனர் காண்பித்திருக்கிறார். ஆனால், இடையில் சில காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் கிளைமாக்ஸில் இயக்குனர் ட்விஸ்ட் வைத்திருக்கிறார். மொத்தத்தில் நரி வேட்டை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.
நிறை:
டொவினோ, சேரன் நடிப்பு அருமை
கதைக்களம் நன்றாக இருக்கிறது
நல்ல மெசேஜ் உள்ள படம்
ஒளிப்பதிவு, இசை, டெக்னிக்கல் அருமையாக இருக்கிறது
கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது
குறை:
படத்தினுடைய முதல் பாதி தான் பொறுமையாக செல்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
காதல் காட்சிகள் தேவையா என்பது போல தான் இருக்கிறது
மொத்தத்தில் நரி வேட்டை - சிறப்பான வேட்டை