பிரகாஷை வைத்து கவர்ச்சி விளம்பரம், 100 கோடியை சுருட்டிய நிறுவனம் - பணத்தை பறிகொடுத்து கண்ணீர் வடிக்கும் மக்கள்.

By subhashini · 19/10/2023

பிரகாஷ்ராஜின் நகை விளம்பரத்தால் பொதுமக்கள் கண்ணீர் வடிக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே துணி, நகை கடை என்றால் சினிமா பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் திருச்சி கரூர் சாலையில் பிரணவ் ஜுவல்லரி என்ற ஒரு நகை கடை செயல்பட்டு வந்தது.

இந்த நகை கடையின் கவர்ச்சியாக பிரபலம்படுத்த பிரகாஷ்ராஜ், வாணி போஜன் உட்பட இன்னும் சில பிரபலங்களை வைத்து விளம்பரம் எடுத்திருக்கிறார்கள். அதில் 0 சதவீதம் செய்கூலி, சேதாரம் கிடையாது. ஒரு கிராமுக்கு 4000 ரூபாய் சேமிக்கலாம், கல்யாணத்திற்கு தேவையான மொத்த நகையின் மூலம் ₹40,000 சேமிக்கலாம் என்றெல்லாம் பிரகாஷ்ராஜ் சொல்லி இருக்கிறார்.

பிரணவ் ஜுவல்லரி :

இதை நம்பி திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து நகை எடுத்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் இந்த ஜுவல்லரியில் நகை சீட்டும் கட்டி வந்திருக்கிறார்கள். 500 ரூபாயில் தொடங்கி இலட்சக்கணக்கில் வரை நகை சீட்டுகள் கட்டப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த நகை நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் நிறைய லாபம் கிடைக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தை சொல்லி கூறியிருக்கிறார்கள்.

https://youtu.be/kiohQfoCr7U?si=kEQq5VVB-wbs0VFL

மோசடி செய்த பிரணவ் ஜுவல்லரி:

இதனால் மக்களும் நம்பி தங்களிடம் இருந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். தற்போது பிரணவ் ஜுவல்லரி முதலாளிகள் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து ஓடிவிட்டார்கள். இதை அறிந்த பொதுமக்கள் கடையின் முன்பு கண்ணீர் மல்க அழுது போராட்டம் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் தான் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் பிரகாஷ்ராஜை திட்டி தீர்த்து வருகின்றனர். இதற்கு பிரகாஷ்ராஜ் தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிரகாஷ்ராஜ் திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். பின் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.

https://www.youtube.com/watch?v=PVIPYiHUC7g

அரசியலில் பிரகாஷ்ராஜ்:

பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும், சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full