காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துல நடிக்காமல் போனதுக்கு என்ன காரணம் ? நயனுடனான பிரச்சனை குறித்து பேசிய திரிஷா.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்காமல் போனது குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் திரிஷா. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். அதே போல தற்போது நயன்தாரா போல பல லீட் ரோல்களில் நடித்து வருகிறார்.
ஆனால், இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இப்படி ஒரு நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்காமல் போனது குறித்து திரிஷா பேசி இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
இந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற காரணமாக இருந்தது நயன்தாரா மற்றும் சமந்தாவின் நடிப்பும் அனிருத்தின் இசையும் தான் காரணம் என்று சொல்லலாம். இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தாவின் ரோலில் முதலில் நடிக்க இருந்தது த்ரிஷா தான் என்றும் திரிஷாவை தான் விக்னேஷ் சிவன் முதலில் யோசித்து வைத்தார் என்றும் ஆனால், த்ரிஷாவை இந்த படத்தில் நடித்து விடாமல் செய்தது நயன்தாரா தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது.
https://twitter.com/chettyrajubhai/status/1607960596863135745
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற திரிஷா இதுகுறித்து பேசுகையில் 'அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கும். அது அத்துடன் முடிந்துவிட்டது, ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொல்வதே தெளிவான ஒரு விஷயம் தானே. நயன்தாராவிற்கும் எனக்கும் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டியாக பார்த்தால் அது நல்ல விஷயம் ஆனால், ஒருவரை ஆதரிப்பதற்காக மற்றொருவரை அசிங்கப்படுத்துவது தான் கேவலம். அது நானாக இருந்தாலும் சரி மற்ற ஒரு நடிகையாக இருந்தாலும் சரி. மேலும், நயன்தாரா உட்பட சினிமாவில் இருக்கும் எந்த ஒரு நடிகையுடனும் எனக்கு பெரிதாக நட்பு இருந்தது இல்லை. ஒருவரிடத்தில் நட்பு இருந்தால் தான் பிரச்சனை ஏற்படுவதற்கு பேசாமல் போனால் வருத்தப்பட வேண்டும். ஆனால், எனக்கு எந்த நடிகை உடனும் அப்படி ஒரு நட்பு இருந்தது கிடையாது' என்று கூறி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=1pXTgRbZ1gg
திரிஷாவிற்கும் நயன்தாராவிற்கு ஏற்கனவே பிரச்சனை இருந்தது உண்மை தான். நயன்தாரா பில்லா பட சமயத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் சக நடிகைகளுடன் இருக்கும் பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது. அப்போது திரிஷா உடனான பிரச்சனை குறித்து பேசிய நயன்தாரா ''எனக்கு நண்பரா இருந்தால் நானே போய் பேசுவேன். எனக்கும் திரிஷாவிற்கும் பிரச்சனை இருக்கிறது என்று பேப்பரில் எல்லாம் எழுதினார்கள்.
ஆனால், அந்த அளவிற்கு எல்லாம் பிரச்சனை கிடையாது. ஆனால், ரெண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காது. அவங்களுக்கு பிடிக்காது என்றால் எனக்கும் பிடிக்காது அவ்ளோ தான்' என்று பேசி இருந்தார் நயன்தாரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்க்கும் போது திரிஷா, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்காமல் போன காரணம் நயன்தாரவுடனான பிரச்சனையாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.