நீச்சல் உடையில் ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம் - திரிஷா போட்ட கமெண்டை பாருங்க.

By Rajkumar · 24/5/2020

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், போகன் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஹன்சிகா அவர்கள் தமிழில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் இணைந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

https://www.instagram.com/p/CAcw2-EnY1M/

சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஹன்சிகா பின்னர் நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தான் தெரியாமல் இருந்து வந்தது. தற்போது இவர் நடித்து வரும் மஹா படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக கிசுகிசுக்கள் அனைத்திலும் இருந்து கொஞ்சம் தப்பியுள்ள நடிகை ஹன்சிகா இடையில் கொஞ்சம் பட வாய்ப்புகள் இல்லாமலும் இருந்து வந்தார். தற்போது அம்மணிக்கு கையில் ஒரே ஒரு படம் மட்டுமே கையில் உள்ளது. இருப்பினும் பார்ட்டி, கிளப் என தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்(ஊரங்டங்கிற்கு முன்).சமீபத்தில் ஹன்சிகா மாலத்தீவில் சுற்றுல்லா சென்றிருந்தார்.

அங்கே கையில் மதுக்கோப்பையுடன் எடுத்த கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஜொள்ளுவிட்ட நிலையில், தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் திரிஷா, ஹன்சிகாவின் இந்த புகைப்படத்தை பார்த்து 'ufff' என்று வியந்து போய் கமன்ட் செய்து உள்ளனர். நடிகை ஹன்சிகாவும் , நடிகை திரிஷாவும் இணைந்து சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full